தற்போது மும்பையில் வசித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு என்கிற டூடில் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும் தற்போது டேட்டிங் செய்து வருவதோடு, ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்தும் வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலளித்தார். இந்த கலந்துரையாடலின் போது சில வில்லங்கமான கேள்விகளும் கேட்கப்பட்டன. அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.