தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் கைவசம் தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகுதாதா ஆகிய படங்களும், தெலுங்கில் தசரா, போலா சங்கர் ஆகிய படங்களும் உள்ளன.
இதில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா திரைப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கு படமான இது தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆக உள்ளது.
இதுதவிர கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி.
தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ள போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். வேதாளம் படத்தின் ரீமேக்கான இதில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார் கீர்த்தி.
இதுதவிர ரிவால்வர் ரீட்டா மற்றும் ரகுதாதா போன்ற படங்களும் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளன. இந்த இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி வரும் படங்களாகும்.
இப்படி தமிழ் தெலுங்கில் பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக கிளாமராக போட்டோஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் அதகளப்படுத்தி வருகிறார்.