pratap pothen
பிரதாப் போத்தன் தமிழில் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் ,போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். இருப்பினும், சத்யராஜ் நடித்த ஜீவா, மகுடம், கார்த்திக் நடித்த லக்கி மே உள்ளிட்ட படங்களுக்கு இவருக்கு அடுத்தடுத்து தோல்வியை தந்தது.
Prathap Pothan: யார் இந்த பிரதாப் போத்தன்...? இவரது இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த வெற்றி படங்கள் லிஸ்ட்..
Pratap Pothen
இவர் திரைப்பட நடிகை ராதிகாவோடு இணைந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் நண்பர்கள் துணையோடு, உற்றார் உறவினர்கள் முன்னிலையில் 1985ல் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1986ம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களது விவாகரத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Pratap Pothen
இந்த நிலையில், இவருக்கு சினிமாவை போன்று குடும்ப வாழ்கை வெற்றியாக இல்லாமல் போனதால், சமீப காலமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இவர், இன்று காலை இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அறிந்து அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.