பிரதாப் போத்தன் யார்? அவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார் என்பது குறித்து பார்ப்போம்:
1952 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்... கொளத்திங்கால் போத்தன் மற்றும் பொன்னம்மா போத்தன் ஆகியோருக்கு இளைய மகனாக பிறந்தவர் தான் பிரதாப். இவருடைய தந்தை கொளத்திங்கால் போத்தன், ஒரு தொழிலதிபர். வசதியான குடும்பத்தில் பிறந்த பிரதாப் தன்னுடைய 5 வயதில் ஊட்டியில் உள்ள லாரன்ஸ் ஸ்கூல் என்ற பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கினார்.
பள்ளி படிப்பை முடித்த பின்னர் சென்னை வந்த பிரதாப், தன்னுடை கல்லூரி நண்பர்களின் உதவியோடு நாடகங்களில் நடிக்க துவங்கினார். படிப்படியாக ஓவியம் வரைவதைவிட நடிப்பில் இவரது முழு ஆர்வமும் சென்றது. பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிரதாப், மும்பை விளம்பர நிறுவனத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார், மேலும் சிஸ்டாஸ் ஆட் ஏஜென்சி மற்றும் ஹிந்துஸ்தான் தாம்சன் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இவரது சகோதரர் சில படங்களை தயாரித்துள்ளதால், இவருக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு எளிதாகவே கிடைத்தது. 'அரவம்' என்கிற படத்தில் அறிமுகமான பிரதாப், தன்னுடைய இரண்டாவது படத்தை தமிழ் மாற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நடித்தார். அதாவது அழியாத கோலங்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
மேலும் செய்திகள்: 'கார்கி' படத்தில் சாய்பல்லவிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்..!
அடுத்தடுத்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. சிறந்த நடிகராக மட்டும் இன்றி, திரையுலகில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக பிரதாப் இயக்கத்தில் வெளியான, ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, மை டியர் மாத்தாண்டன் போன்ற படங்கள் தற்போது வரை, ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த படங்களாக உள்ளது.
ராதிகாவை பிரிந்த பின்னர் அமலா சத்யநாத் என்பவரை 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கீயா என்கிற மகள் உள்ள நிலையில், 2012 ஆம் ஆண்டு மனைவி அமலாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.