இப்போல்லாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க படம் நடிக்க வர்றாங்க... நடிகர் ராதாரவி பரபரப்பு பேச்சு

First Published | Aug 3, 2022, 11:01 AM IST

Radha Ravi : இரவின் நிழல் படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் சிவா, தனஞ்செயன் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர். 

பார்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை அவர் சிங்கிள் ஷாட்டில் படமாக்கி இருந்தார். அதுமட்டுமின்றி உலகிலேயே நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இரவின் நிழல் தான்.

இப்படம் வெளியானது முதல் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஏராளமானோர் இப்படத்தை பார்த்து வியந்து பாராட்டினர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்து பார்த்திபன், இப்படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என நிரூபித்துவிட்டதாக பாராட்டினார்.

இதையும் படியுங்கள்... வின்னர்.. வின்னர்.. சிக்கன் டின்னர்! தனுஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு செஸ் வீரர்கள் - வைரல் வீடியோ

Tap to resize

இந்தநிலையில், இரவின் நிழல் படத்தின் சக்சஸ் மீட் அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் சிவா, தனஞ்செயன் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகர் ராதா ரவி பார்த்திபனின் முயற்சியை பாராட்டி பேசினார்.

அவர் பேசியதாவது : “பார்த்திபன் மூஞ்சிய 2 மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா, ஆனா ஒத்த செருப்பு படத்துல பார்க்க வச்சான்ல, அதுதான் திறமை. இப்போலாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க. நான் சாபம் விட்டாலே அப்படி ஆகிடுவாங்க போல. விளம்பரத்துல ஆடுறத பார்த்தப்பவே இவன் நடிக்க வந்துருவான்னு சொன்னேன் ஒரு மேடைல. அதே மாதிரியே வந்துட்டான்யா” என பேசி உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் லெஜண்ட் சரவணனைப் பற்றிதான் இவ்வாறு பேசியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து ஐடி ரெய்டில் சிக்கும் அன்புச்செழியன் - யார் இவர்?... சினிமாவில் இவரின் பங்களிப்பு என்ன?

Latest Videos

click me!