பொன்னியின் செல்வன் படவிழாக்களுக்கு தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் விக்ரம்.. பின்னணியில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கா

First Published | Aug 3, 2022, 7:39 AM IST

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம், பொன்னியின் செல்வன் பட விழாக்களை தொடர்ந்து புறக்கணிப்பதற்கு மணிரத்னம் மீதுள்ள அதிருப்தி தான் காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் உலா வருகிறது.

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்கி உள்ளனர். அதில் முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Tap to resize

இப்படத்தின் ரிலீசுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மேல் இருந்தாலும், படத்தின் புரமோஷன் வேலைகளை தற்போதே தொடங்கிவிட்டனர். அதன்படி கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய படக்குழு, சமீபத்தில் பொன்னி நதி என்கிற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடத்தியது.

இதையும் படியுங்கள்... நிச்சயதார்த்தம் முடிஞ்சி 3 வருஷம் ஆகியும் விஜயகாந்த் மகனுக்கு திருமணமாகாதது ஏன்?... மணப்பெண் யார் தெரியுமா?

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் படத்தில் நாயகர்களில் ஒருவரான விக்ரம் கலந்துகொள்ளவில்லை. அவரின் பொன்னியின் செல்வன் பட விழாக்களை தொடர்ந்து புறக்கணிப்பதற்கு மணிரத்னம் மீதுள்ள அதிருப்தி தான் காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. அதாவது படத்தின் கதைப்படி ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலில் இது முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும், இப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் நிறைய எடிட் செய்யப்பட்டுவிட்டதாம். இதனால் மணிரத்னம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் விக்ரம். இதன்காரணமாகத் தான் அவர் பொன்னியின் செல்வன் பட விழாக்களில் தொடர்ந்து ஆப்சென்ட் ஆகி வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் குறையாத கிளாமர்! உச்ச கவர்ச்சியில் ஆர்யா மனைவி சாயிஷா வெளியிட்ட புகைப்படம்

Latest Videos

click me!