இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 3 விருதுகளை வென்றுள்ளது. அதன்படி கல்ட் மூவீஸ் இண்டர்நேஷனல் மற்றும் நியூ யார்க்கில் நடைபெற்ற ஓனிராஸ் பிலிம் அவார்ட்ஸ் ஆகியவற்றில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது இரவின் நிழல் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனுக்கு கிடைத்தது. அதேபோல் மெடுசா திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. இதுதவிர நியூயார்க் மற்றும் ரோம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு நாமினேட்டும் ஆகி உள்ளது.