விஜயலட்சுமி என்னும் பெயரில் ஆந்திராவில் பிறந்த ரம்பா. முதலில் தெலுங்கில் அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டு வெளியான உழவன் படத்தில் ஈஸ்வரியாக தமிழுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் 'உள்ளத்தை அள்ளித்தா' வில் நாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று கொடுத்தது.