சினிமாவில் மேக்கிங் செலவைவிட ஹீரோஸின் சம்பளம்தான் அதிகம்! அப்புறம் எப்படி படம் நல்லாவரும்- பார்த்திபன் ஆதங்கம்

Published : Jul 07, 2022, 09:00 AM IST

R Parthiban :சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பார்த்திபன், சினிமாவில் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

PREV
15
சினிமாவில் மேக்கிங் செலவைவிட ஹீரோஸின் சம்பளம்தான் அதிகம்! அப்புறம் எப்படி படம் நல்லாவரும்- பார்த்திபன் ஆதங்கம்

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் தற்போது இரவின் நிழல் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரிகதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்... சண்டையால் உடைந்த வெற்றிக் கூட்டணி... பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இல்லை

25

இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த படம் முழுவதும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது. உலகளவில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

35

படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பார்த்திபன், சினிமாவில் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

இதையும் படியுங்கள்... பூமர் அங்கிள் ஆனார் யோகிபாபு! வடிவேலுவுக்காக பெயரை மாற்றிக்கொண்ட சுவாரஸ்ய பின்னணி

45

படத்தின் மொத்த பட்ஜெட்டில் பெரும்பாலான தொகை அப்படத்தின் நாயகர்களுக்கே செலவழிக்கப்படுவதாகவும், படத்தை எடுக்க குறைந்த அளவிலான தொகை மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் கூறி உள்ள அவர், இப்படி இருந்தால் எப்படி நல்ல படம் வரும் என கேள்வி எழுப்பி உள்ளார். நல்ல படம் எடுத்தாலும் அதற்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தளபதி எப்போதுமே வேற லெவல்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட தகவலால் ரசிகர்கள் குஷியோ குஷி!!

55

ஹாலிவுட்டில் 500 கோடிக்கு படம் எடுத்தால் அதில் பெரும்பாலான தொகையை மேக்கிங்கிற்கு செலவழிக்கிறார்கள். அதனால் தான் அங்கு தரம் குறையவில்லை. ஆனால் இங்கு 200 கோடிக்கு படம் எடுத்தால் அதில் 125 கோடியை நடிகருக்கும், 25 கோடியை இயக்குனருக்கும் கொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

click me!

Recommended Stories