Published : Dec 11, 2024, 12:10 PM ISTUpdated : Dec 11, 2024, 12:21 PM IST
1000 crore box office collection movies : பான் இந்தியா படங்கள் ஹிட் ஆனால் ஆயிரம் கோடி வசூல் அள்ளுவது வழக்கம், அந்த வரிசையில் புஷ்பா 2 படமும் இணைந்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்த படம் புஷ்பா 2. இப்படத்தை சுகுமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பான் இந்தியா அளவில் சக்கைப்போடு போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அந்த வகையில் ரிலீஸ் ஆன ஆறு நாட்களில் 1000 கோடி என்கிற இமாலய வசூலை புஷ்பா 2 வாரிக்குவித்துள்ளது. அதிவேகமாக ஆயிரம் கோடி வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் புஷ்பா 2 படைத்துள்ளது. இந்த நிலையில், புஷ்பா 2-வுக்கு முன்னதாக ஆயிரம் கோடி வசூல் அள்ளிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
28
Dangal
தங்கல்
இந்தியாவின் முதல் 1000 கோடி வசூலித்த திரைப்படம் தங்கல் தான். அமீர்கான் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் இந்தியாவில் 550 கோடியும், வெளிநாடுகளில் 1450 கோடியும் வசூலித்து மொத்தமாக 2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டி இருந்தது.
38
Baahubali 2
பாகுபலி 2
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு திரைக்கு வந்து பான் இந்தியா அளவில் சக்கைப்போடு போட்ட பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் 1450 கோடியும், வெளிநாடுகளில் 360 கோடியும் வசூலித்து மொத்தமாக 1800 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது.
48
RRR
ஆர்.ஆர்.ஆர்
பாகுபலி 2 வெற்றிக்கு பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் ராம்சரணும், ஜூனியர் என்.டி,ஆரும் ஹீரோவாக நடித்திருந்தனர். இப்படம் இந்தியாவில் 950 கோடியும், வெளிநாடுகளில் 440 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக 1390 கோடி வசூல் ஈட்டி இருக்கிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நாயகனாக நடித்து கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம், இந்தியாவில் 1008 கோடியும், வெளிநாடுகளில் 242 கோடியும் வசூலித்து உலகளவில் 1250 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது.
68
Kalki 2898AD
கல்கி 2898AD
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மே மாதம் திரைக்கு வந்த கல்கி திரைப்படம், இந்தியளவில் 877 கோடியும், வெளிநாடுகளில் 323 கோடியும் வசூலித்து உலகளவில் 1200 கோடி வசூல் செய்திருக்கிறது.
78
Jawan
ஜவான்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் ஜவான். இப்படம் இந்தியாவில் 760 கோடியும், வெளிநாடுகளில் 388 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக 1148 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது.
88
Pathaan
பதான்
ஆயிரம் கோடி கிளப்பில் உள்ள மற்றொரு ஷாருக்கான் படம் தான் பதான். இப்படமும் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். இப்படம் இந்தியாவில் 650 கோடி, வெளிநாடுகளில் 400 கோடி என ஒட்டுமொத்தமாக 1050 கோடி வசூலித்திருந்தது.