லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அடிதூள் அப்டேட்..!

Published : Jul 17, 2026, 02:27 PM IST

Jana Nayagan Update : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற ஜூலை 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தை பற்றி முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.

PREV
15
Jana Nayagan Movie Re Edited

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வந்தவர் தளபதி விஜய். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக கோலோச்சி வந்த நிலையில், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்குள் குதித்துவிட்டார். கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கிய அவர், கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட அரசியல் பணிகளின் பலனாக தற்போது சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் அமோக வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

25
விஜய்யின் கடைசி படம்

விஜய் கட்சி தொடங்கியபோதே, தன்னுடைய கடைசி படம் ஜனநாயகன் தான் என அறிவித்துவிட்டார். இதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகரிக்க தொடங்கியது. ஜனநாயகன் படத்தை எச்.வினோத் தான் இயக்கி இருக்கிறார். விஜய்க்கு ஒரு பக்கா ஃபேர்வெல் படமாக கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் பல்வேறு கமர்ஷியல் அம்சங்களுடன் ஜனநாயகன் திரைப்படத்தை செதுக்கி இருந்தார் வினோத். அப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் முழுவீச்சில் நடந்தது.

35
சென்சார் சிக்கல்

ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டதால், ஜனநாயகன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண முடியாமல் போனது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சட்ட போராட்டமும் நடத்தியது படக்குழு, ஆனால் எதுவும் கைகொடுக்காததால், வேறுவழியின்றி வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு, படத்தை மறுதணிக்கை செய்ய அனுப்பியது. அதற்குள் எலெக்‌ஷன் அறிவிக்கப்பட்டதால், ஜனநாயகன் படம் அப்படியே ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிப் போனது. தற்போது விஜய் முதலமைச்சர் ஆன பின்னர் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

45
வேகமெடுக்கும் ரிலீஸ் பணிகள்

இதனிடையே கடந்த வாரம் இந்த படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக போஸ்டர் வெளியிட்ட படக்குழு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஜூலை 23ந் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், விஜய் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர். ஜனநாயகன் படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனதால், அப்படத்திற்கு தியேட்டரில் வரவேற்பு இருக்குமா என்கிற கேள்வியும் எழுந்தது.

55
தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

ஆனால் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் தகவலை வெளியிட்டு உள்ளார். ஜனநாயகன் படத்தில் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு ரீ எடிட்டிங் செய்துள்ளதாக கூறிய அவர், இந்த வெர்ஷன், தியேட்டரில் படம் பார்க்கும் விஜய் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என கூறி இருக்கிறார். இதனால் அப்படத்தின் மீதான ஹைப் மேலும் அதிகரித்து உள்ளது. ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கெளதம் மேனன், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories