ராஜமௌலிக்காக காதலை விட்டுக்கொடுத்தேன்; செய்வினை - சூனியத்தில் ஈடுபடுகிறார் - ஷாக் கொடுத்த பிரபலம்!

Published : Mar 01, 2025, 05:39 PM IST

Rajamouli Issue: இயக்குனர் ராஜமவுலி பற்றி அவருடைய நண்பரும் - தயாரிப்பாளருமான உப்பலபதி ஸ்ரீனிவாச ராவ் (Srinivasa Rao) வீடியோ மற்றும், கடிதத்தில் கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

PREV
15
ராஜமௌலிக்காக காதலை விட்டுக்கொடுத்தேன்; செய்வினை - சூனியத்தில் ஈடுபடுகிறார் - ஷாக் கொடுத்த பிரபலம்!

ராஜமௌலியின் நண்பரும் தயாரிப்பாளருமான உப்பலபதி ஸ்ரீனிவாச ராவ், மேட்டுக்குடா காவல் நிலையத்திற்கு எழுதியுள்ள கடிததில் கூறியுள்ள தகவல் தான் இந்த, ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. "ராஜமவுளியை 1990 களில் இருந்தே எனக்கு நன்கு தெரியும். அவர்தான் தன்னுடைய வாழ்க்கையை அழித்து விட்டார்.
 

25
தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் ராஜமவுலி

இன்று தான் தனிமையில் இருக்க அவர்தான் காரணம் அதே போல் தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் ராஜமவுலி தான் என குற்றம் சாட்டியுள்ளார். நான் ராஜமௌலியின் நண்பர் என்பது எம் எம் கீரவாணி, சந்திரசேகர் யெலெட்டி, அனு ராகவபுடி உள்ளிட்ட அனைவருக்குமே நன்கு தெரியும். 55 வயதாகும் நான், இன்று தனிமையில் இருப்பதற்கு காரணம் ராஜமௌலி தான். காரணம் தங்களுக்கு இடையே வந்த ஒரு பெண்தான் என ராஜமௌலியின் மனைவியை குறிப்பிட்டு கூறியுள்ளார். இப்போது எனக்கு தற்கொலை கொள்வதை தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை.

13 படங்கள்... இதுவரை தோல்வியே காணாத பிரபலம்; கிருஷ்ணர் வேடத்தில் இருப்பது யார் தெரியுமா?


 

35
காதலை ராஜமௌலி விட்டு விடும்படி கூறினார்.

அந்தப் பெண் மீது, நான் வைத்திருந்த காதலை ராஜமௌலி விட்டு விடும்படி கூறியதாகவும், முதலில் நான் இதற்கு மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டேன். நான் இது குறித்து மற்றவர்களிடம் சொன்னதாக ராஜமௌலி நம்பினார். இது தொடர்பான வாக்குவாதமே பிறகு எங்களுக்குள் பிரச்சினையாக மாறியது. ராஜமௌலி தன்னை சித்திரவதை செய்ய தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.
 

45
செய்வினை - சூனியத்தில் ஈடுபட்டு வருகிறார்

அதேபோல் செய்வினை - சூனியத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். தயாரிப்பாளர்களை தொடர்ந்து அவமதிக்கிறார். தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள சில தவறான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் சீனிவாச ராவ் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் இருந்து எந்த ஒரு போதிய ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. நான் ராஜமௌலியை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

எந்த கணவனும் செய்ய தயங்கும் செயல்; மனைவிக்காக தினமும் இரவில் இதை செய்வாரா ராஜமௌலி?
 

55
ஸ்ரீனிவாசா ராவ் ராஜமௌலியின் 'யமடோங்கா' படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர்

டோலிவுட் திரையுலகில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இதுவரை வரை ராஜமவுலி தரப்பில் இருந்து இதற்க்கு எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீனிவாசா ராவ் ராஜமௌலியின் 'யமடோங்கா' படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories