3 குழந்தைக்கு தாயான பின்னர் 48 வயதில் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா!

Published : Mar 01, 2025, 04:30 PM IST

Rambha Re entry: தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்த, ரம்பா தற்போது தன்னுடைய ரீ-என்ட்ரியை உறுதி செய்துள்ளார்.   

PREV
16
3 குழந்தைக்கு தாயான பின்னர் 48 வயதில் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா!

தன்னுடைய 15 வயதிலே ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் தான் ரம்பா. 1992-ஆம் ஆண்டு 'Aa Okkati Adakku' இவர் நடித்த முதல் படம் வெளியாகி, பெரிதாக வரவேற்பை பெற்றவில்லை என்றாலும், ரம்பாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க  காரணமாக அமைந்தது.
 

26
திருப்புமுனையை ஏற்படுத்திய உள்ளத்தை அள்ளித்தா

தெலுங்கில் அறிமுகமான ஒரே வருடத்தில், தமிழிலும் இவருக்கு 'உழவன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் தெலுங்கில் அதிக கவனம் செலுத்திய ரம்பாவுக்கு, தமிழில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது சுந்தர் சி இயக்கத்தில் 1996-ல் வெளியான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம். இதன் பின்னர் இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான, ரம்பா தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து அசத்தினார்.

ரம்பாவுக்கு பரிசாக கொடுத்த வீடு – கோடிக்கு ஆசைப்பட்டு திரும்ப கேட்கும் கவுண்டமணி குடும்பம்!
 

36
விஜய் மற்றும் அஜித்துடன் பல படங்களில் நடித்துள்ளார்

குறிப்பாக தமிழில் விஜய் மற்றும் அஜித்துடன் பல படங்களில் நடித்துள்ளார். அதே போல் கமல்ஹாசன், பிரபு தேவா, கார்த்திக், சத்யராஜ், போன்ற நடிகர்களுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி, நாகர்ஜுனா, நந்தமூரி பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.

46
2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை இவருக்கு உள்ளது:

75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள,  ரம்பா தன்னுடைய மார்க்கெட் குறைய துவங்கிய பின்னர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது இவருக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை இவருக்கு உள்ளது. குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்த ரம்பா, கணவரின் தொழில் காரணமாக சென்னையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் வாங்கியுள்ள சொகுசு பார்ட்மென்டின் கீழ் தளத்தில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த ஒரு நடிகைக்காக கணவரை பாலோ பண்ணாத ரம்பா – ஓபனாக பேசிய வீடியோ வைரல்!
 

56
ம்பா தன்னுடைய ரீஎன்ட்ரி திட்டத்தை வெளியிட்டுள்ளார்

திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து ரம்பா விலகிய நிலையில், மீண்டும் தான் சினிமாவில் நடிக்க விரும்புவதாக தற்போது தெரிவித்துளளார். சமீபத்தில் கூட ரம்பா தன்னுடைய ரீஎன்ட்ரி திட்டத்தை வெளியிட்டுள்ளார் . ஒரு காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்த ரம்பா இப்போது தன்னுடைய மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த தயாராகியுள்ளார். 

66
ஆடியன்ஸை கவரும் திரைப்படங்களுடன் ரீஎன்ட்ரி கொடுக்க நான் ஆவலுடன் இருக்கிறேன்:

ரீஎன்ட்ரி குறித்து ரம்பா பதிலளித்தார். அவர் பேசுகையில்.. ‘எனது முதல் சாய்ஸ் எப்போதும் சினிமா தான். இப்போது எந்த சவாலான ரோல்ஸ் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். அதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

புதிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஆடியன்ஸை கவரும் திரைப்படங்களுடன் ரீஎன்ட்ரி கொடுக்க நான் ஆவலுடன் இருக்கிறேன்’ என்றார். ரசிகர்களும், இவரது ரீஎன்ட்ரிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ரம்பாவின் ரீஎன்ட்ரி எப்படி இருக்கும்.. எந்த மாதிரியான திரைப்படத்தை இவர் தேர்வு செய்து நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. 

இருப்பினும் ஏற்கனவே கொடுத்த ஒரு நேர்காணலில் அவர் பேசுகையில், ஒரு காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்தேன். இனிமேல் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன், தன்னுடைய இன்னொரு அங்கிளை ஆடியன்ஸுக்கு காட்ட வேண்டும் என நினைக்கிறன் , நல்ல நடிகையாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்தார். செகண்ட் இன்னிங்ஸில் பல நடிகைகள் ஜொலிக்க தவறிய நிலையில்.. இவரது ரீ-என்ட்ரி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

click me!

Recommended Stories