
Top 4 Best Movies OTT Release In March : குடும்பஸ்தன் முதல் விடாமுயற்சி வரை மார்ச் மாதம் ஓடிடிக்கு வரும் படங்கள் பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு வாரமும் ஏராளமான படங்கள் திரைக்கு வருவதும் ஒரு மாதத்திற்கு பிறகு அந்த படங்கள் ஓடிடிக்கு வருவதும் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் நடைபெற்று வருகிறது. இதுவே ஒரு மாஸ் படமாக இருந்தால் அந்தப் படம் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடப்படும். அதுவும், இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று வெளியிடப்படும்.
இந்த நிலையில் தான் கடந்த மாதம் திரைக்கு வந்த படங்கள் இந்த மாதம் ஓடிடிக்கு வந்துவிட்டன. அந்த படங்கள் என்னவென்று பார்க்கலாம். குடும்பஸ்தான் முதல் அஜித் குமாரின் விடாமுயர்ச்சி வரை Netflix, Zee5 மற்றும் SonyLIV போன்ற OTT தளங்களில் வர உள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.
ஓடிடியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் குடும்பஸ்தன்:
கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் குடும்பஸ்தன் (Kudumbasthan OTT Release). முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் கடன் வாங்குவதையும், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன் தனது குடும்பக் கஷ்டத்தை எப்படியெல்லாம் சமாளிக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டியது. அன்றாட நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம் என்பதால் இந்தப் படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து.
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைமாக அமைந்தது. அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, ஆர் சுந்தர்ராஜன், குரு மோகனசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலிஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் வரும் மார்ச் 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் குடும்பஸ்தன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி (Vidaamuyarchi OTT Release)
ஓடிடியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விடாமுயற்சி படமும் ஒன்று. கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி சோலோவாக திரைக்கு வந்த விடாமுயற்சி ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற விடாமுயற்சி ரூ.138 கோடி வரையில் வசூல் குவித்தது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஹாலிவுட் படமாக பிரேக்டவுன் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் இந்தப் படம் வெளியாகி 25 நாட்களில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.100 கோடி கொடுத்து பெற்றுள்ளது. தமிழில் வெளியாவதோடு மட்டுமின்றி விடாமுயற்சி படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
சங்கராந்திகி வாஸ்துனம் (Sankranthiki Vasthunam)
இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் பலரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் தான் சங்கராந்திகி வாஸ்துனம். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்த நிலையில் தான் திரைக்கு வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலான இந்தப் படம் இன்று மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ரேகாசித்ரம் (Rekhachithram)
ஜோஃபின் டி. சாக்கோ இயக்கத்தில் ஆசிப் அலி, அனஸ்வர ராஜன், மம்மூட்டி, சித்திக், சித்திக் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த படம் தான் ரேகாசித்ரம். ரூ.9 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.75 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இந்த நிலையில் தான் மார்ச் 7ஆம் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.