Dhanush Neek Movie: தனுஷின் 'NEEK' படத்தால் ஒரு குடும்பமே பிரிஞ்சிடுச்சா? பீதியை கிளப்பிய பதிவு!

Published : Mar 01, 2025, 02:04 PM IST

Fan Shocking Post for Neek Movie: தனுஷ் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தால் ஒரு குடும்பமே பிரிந்து விட்டதாக, சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு தீயாக சுற்றி வருகிறது.  

PREV
14
Dhanush Neek Movie: தனுஷின் 'NEEK' படத்தால் ஒரு குடும்பமே பிரிஞ்சிடுச்சா? பீதியை கிளப்பிய பதிவு!

கோலிவுட் திரையுலகை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் (Dhanush)  இயக்கத்தில் 3-ஆவது திரைப்படமாக வெளியானது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' (Nilavukku Enmel Ennadi Kobam Movie) .  ஒரு இயக்குனராக தன்னுடைய முதல் படத்தியிலேயே, வெற்றி ருசித்த தனுஷ். அந்த வகையில், தன்னுடைய அப்பாவின் முதல் பட ஹீரோவான ராஜ்கிரணை கதையின் நாயகனாக வைத்து இயக்கி இருந்தார். இரண்டாவதாக தன்னுடைய 50-ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் தனுஷுக்கு ரூ.100 கோடி வசூலை பெற்று தந்தது.

24
தனுஷின் ராயன் திரைப்படம்:

இந்த படத்தில் தனுஷ், இதுவரை ஏற்று நடித்திராத கெட்டப்பிலும் - கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதே போல் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய அக்கா மகன் பவிஷை ஹீரோவாக வைத்து இயக்கி இருந்த திரைப்படம் தான், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்' திரைப்படம். 

NEEK Day 2 Collection: இரண்டாவது நாளே வசூலில் படு மோசம்? இந்த ரேஞ்சுக்கு போன தனுஷின் NEEK படம் அட்ட பிளாப்!
 

34
நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்

இளவட்ட ரசிகர்களின் காதல் மற்றும் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. அதே போல் தனுஷ் தன்னுடைய ஹார்ட்க்வெற்றியை உறுதி செய்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. தயாரிப்பாளர் ராஜன் உட்பட பலர் 'NEEK' படத்தை கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

44
குடும்பமே பிரிந்துவிட்டதா?

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து ஒரு குடும்பமே பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வட்டமிட்டு வருகிறது. "அதாவது, தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை பார்த்த பின், ரசிகர் ஒருவர் தன்னுடைய மனைவியிடம் எக்ஸ் காதலி பற்றி பேசியதாகவும், இதை தவறாக புரிந்து கொண்ட அந்த பெண், இன்னும் நீ அவள் நினைப்புல தான் இருக்கியா? என்று அம்மாவீட்டுக்கு சென்றுவிட்டாராம்.இதனால் ஏன் எந்த குடும்பம் பிரிஞ்சவும் தனுஷ் தான் காரணம்னு ஏன் சொல்றாங்கன்னு இப்போ தான் புரியுதுனு, அந்த ரசிகர் போட்ட பதிவு என கூறப்பட்டும்... இந்த பதிவு போலியானதா இருக்க கூடும் என நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். 

லட்சங்களில் தடுமாறும் நீக்; கோடிகளை குவித்த டிராகன் - 4ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
 

click me!

Recommended Stories