Sai Pallavi Salary For Ramayana Part 1: பாலிவுட்டில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ராமாயண் படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
Sai Pallavi Salary For Ramayana Part 1: தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பது நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா தான். இவர்களுக்கு அடுத்த வரிசையில் இடம் பெற்றிருப்பது கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, சாய் பல்லவி. சமீபகாலமாக சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் எல்லா படமும் ஹிட் படமாக அமைகிறது. தமிழில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வந்த அமரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவர் நடிப்பில் வெளியான தண்டேல் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.
25
Sai Pallavi Salary For Ramayana Part 1
Sai Pallavi Salary For Ramayana Part 1: இந்தப் படத்திற்கு பிறகு இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். ஏக் தின் மற்றும் ராமாயணா பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ராமாயணா படத்திற்கு சாய் பல்லவி வாங்கும் சம்பளம் தான் மற்ற நடிகைகளுக்கு ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களில் அதிக கவனம் செலுத்தி நயன்தாரா நடித்து வருகிறார். அதோடு ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெற்று வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
35
Sai Pallavi Salary For Ramayana Part 1
இவருக்கு அடுத்த வரிசையில் இருப்பது ராஷ்மிகா மந்தனா. புஷ்பா 2 படத்திற்கு ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெற்ற ராஷ்மிகா சாவா படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் அனுஷ்கா ஷெட்டியும் இருக்கிறார். அவர் இப்போது பெண்களை மையப்படுத்திய படங்களில் நடிக்கிறார். தற்போது நடித்து வரும் `காட்டி` படத்துக்கு அனுஷ்கா 7 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.
45
Sai Pallavi Salary For Ramayana Part 1
த்ரிஷா இப்போது தென்னிந்தியாவில் பிஸியாக இருக்கிறார். சீனியர் ஹீரோக்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறார். விஜய், அஜித், சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேருகிறார். அவரும் அதிகமாக சம்பளம் வாங்குகிறாராம். ஒரு படத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. சாய் பல்லவி இவர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார். அவர் சம்பளத்தை இரண்டு, மூன்று மடங்கு உயர்த்தியுள்ளார்.
55
Sai Pallavi Salary For Ramayana Part 1
`தண்டேல்` படத்துக்கு 5 கோடி வரை வாங்கிய அவர் இப்போது பாலிவுட்டில் `ராமாயணா பார்ட் 1` படத்தில் நடிக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். யாஷ் ராவணனாக நடிப்பதாக தகவல். இந்த படத்துக்காக சாய் பல்லவி 15 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு மட்டும் ரூ.15 கோடி என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக ராஷ்மிகா மந்தனா மற்றும் நயன்தாரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.