புதிதாக கல்யாணம் ஆன ஜோடிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுவும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டால் அவர் வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடுவார்கள், சமீபத்தில் விக்கி - நயன் ஜோடி கூட தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஹனிமூன் கொண்டாடினர். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியும் எங்கு ஹனிமூன் செல்ல உள்ளார்கள் என்பதை சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளனர்.