ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி மவுசு உண்டு. தமிழில் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளது. வருகிற அக்டோபர் 2-ந் தேதி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கும்.
தற்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் விவரம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதன்படி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள 10 பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.