தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். சூரி கதைநாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் கவுதம் மேனன், பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், நடிகை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
24
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் வெற்றிமாறனும், இளையராஜாவும் முதன்முறையாக இணைந்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், விடுதலை படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தனுஷ், ரஜினி, கமல் ஆகியோர் பாடல் பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷ் தனியாகவும், ரஜினி, கமல் ஆகியோர் இணைந்து பாடல் பாடி உள்ளார்களாம்.
44
நடிகர் தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பின் அவருடனே இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி உள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் தனுஷ் பாடிய பாடல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் ரஜினி, கமல் இணைந்து பாடியுள்ள பாடல் எப்படி இருக்கும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.