இரு மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நயன்தாரா.. வெளியானது காட் ஃபாதர் ரிலீஸ் டேட்

First Published | Sep 8, 2022, 7:07 PM IST

காட் ஃபாதர்  படம் தற்போது திரைக்கு வரும் தேதியை மாஸான போஸ்டர்உடன்வெளியிட்டுள்ளது படக்குழு

god father

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது, கோல்ட் , காட்ஃபாதர் ஜவான், கனெக்ட் என எக்கச்சக்க படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு இவர் இறுதியாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் திரையரங்கிலும் O2 ஓடிடியிலும் வெளியாகி இருந்தது.  திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக ஒப்பந்தம் ஆகி வரும் லேடி சூப்பர் ஸ்டார் தமிழ், தெலுங்கு பாலிவுட் என படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.. 

god father

இந்நிலையில் இவர் நடித்துள்ள  காட் ஃபாதர்  ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக அரசியல்  தில்லுராக  பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியிருந்த லூசிஃபர் படத்தின் ரீமேக் தான் காட்பாதர்.

மேலும் செய்திகளுக்கு...முகப்பருவால் பறிபோன வாய்ப்பு..மனம் தளராமல் முயற்சி செய்யும் பாண்டியன் ஸ்டோர் நடிகை....அவரே சொன்ன குட் நியூஸ்

Tap to resize

இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் மற்றும் நம்ம ஊரு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூவரும் இணைந்துள்ளனர். ஜெயம் ரவியின் அண்ணனும் பிரபல இயக்குனருமான மோகன் ராஜா இதை இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்புகளை பெற்றிருந்தது  லூசிஃபர். இந்த படத்தில் மோகன் லால் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...ராஷ்மிகாவிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ரசிகர்கள்...பதறிப்போன வாரிசு பட நாயகி..

God father

கடந்த 2017 -ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்கிற படத்தை இயக்கிய மோகன் ராஜா பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது காட்பாதர் படத்தை உருவாக்கி வருகிறார். அரசியல் த்ரில்லரான இந்த படத்தில் பிரபுதேவா இயக்கிய பாடல் ஒன்று படமாக்கப்பட்டது குறித்து முன்னதாக இயக்குனர் மோகன்ராஜ் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் மெகா பாடலை முடித்துள்ளோம் என டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான பிரபுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார் இயக்குனர். 

மேலும் செய்திகளுக்கு...சத்தமில்லாமல் நடந்த பிரபல இயக்குனரின் திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ

GOD FATHER

ஹைதராபாத் ஊட்டி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது திரைக்கு வரும் தேதியை மாஸான போஸ்டர்உடன்வெளியிட்டுள்ளது படக்குழு

Latest Videos

click me!