சுருட்டை முடி அழகியான அனுபமா பரமேஸ்வரன்... கேரளத்து சேலையில் தலை நிறைய மல்லி பூ சூடி, மனநிறைவான புன்னகையுடன் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
சர்பட்டா பட வேம்புலியா இது? கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஜான் கொக்கேன் தன்னுடைய காதல் மனைவி பூஜாவுடன், வீட்டில் பூகோலமிட்டு பாரம்பரிய உடையில் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வரும் ஜனனி... அளவான மேக்அப் போட்டு, உடைக்கு ஏற்ற போல் நகைகள் அணிந்து பேரழகியாக ஜொலிக்கிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்... கேரளத்து பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டையில்... பூ கோலமிட்டு இந்த ஆண்டு ஓணத்தை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
கேரள நடிகையான பார்வதி நாயர்... தமிழில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் இளம் நாயகிகளில் ஒருவர். அழகிய புன்சிரிப்புடன், பேரழகியாக இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்.
வாவ்... இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதோ... ரன் படத்தில் பார்த்த அதே அழகுடன் கேரளத்து சேலையில் ஜொலிக்கிறார் மீரா ஜாஸ்மின்.
96 படத்திற்கு பின்னர், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கர்ணன், மாஸ்டர் போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் கௌரி கிஷன் கொஞ்சம் மாடர்ன் லுக்கில் இந்த ஓணம் பண்டிகையை செலிப்ரேட் செய்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி... தன்னுடைய தங்கை மற்றும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் சைலண்டாக வளர்ந்து வரும் நாயகியான ஐஸ்வர்யா லட்சுமி... இந்த ஆண்டு மிகவும் ஸ்டைலிஷாக ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவரது இந்த ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோப்ரா பட அழகி மிர்னாலினி ரவி, மிகவும் எளிமையாக... வெள்ளை நிற சேலையில், பூரித்த புன்னகையுடன் போஸ் கொடுத்துளளார்.
கீர்த்தி சுரேஷ் மிகவும் சிம்பிளாக, வெள்ளை நிற சேலையை சிங்கிள் பிலீட்டாக கட்டி, கொண்டையில் மல்லி பூ சூடி, பொங்கும் அழகில் இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
மாறன் படத்தில், தனுஷுக்கு தங்கையாக நடித்த ஸ்மிருதி வெங்கடா இது? என அனைவருமே ஆச்சரிப்படும் அளவிற்கு ஓணம் ஸ்பெஷல் போட்டோ ஷூட்டில் ஜொலிக்கிறார்.
கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஓணம் பண்டிகையை மதன் கௌரியோடு கொண்டாடியுள்ளார்.
'மாநாடு' பட நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன், தலை நிறைய மல்லிகை பூவை சுற்றி கொள்ளை அழகில் உள்ளார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்திலும், தற்போது அஜித்துக்கு ஜோடியாக ஏகே 61-ஆவது படத்திலும் நடித்து வரும் மஞ்சு வாரியர், செம்ம கியூட்டாக உடைகள் அணிந்து இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
மலையாள நடிகர் மம்மூட்டி, செம்ம ஸ்டைலிஷாக சேரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய ஓணம் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க கமிட் ஆன மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவிற்கு வெற்றி பெறாமல் போனதால், தற்போது மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது ஓணம் ஸ்பெஷல் கிளிக் இது தான்.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நிலையான ஹீரோயின் இடத்தை பிடித்த நிவேதா தாமஸால் எனோ தமிழில் மட்டும் அந்த இடத்தை கைப்பற்ற முடியவில்லை. எனினும் விஜய்க்கு தங்கை, கமல் ரஜினி போன்றவர்களுக்கு மகளாக நடித்து பிரபலமானார். இவரது ஓணம் ஸ்பெஷல் லேட்டஸ்ட் போட்டோ இதோ...
திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து மாடர்ன் தேவதையாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா மணி... வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல் புகைப்படம் இது.