எட்டு தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் புகழ்பெற்ற இளம் இயக்குனரான ஸ்ரீ கணேஷ் அவர்களின் திருமண புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரண்டாகி வருகிறது.
25
8 thottakkal director sri ganesh wedding
அமிரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பாடம் கற்றுக் கொண்டவ ஸ்ரீ கணேஷ், பின்னர் அவர் ஜப்பானிய திரைப்படமான ஸ்ட்ரே டாக் படம் போல தமிழில் ஒரு படத்தை உருவாக்க எண்ணி, எட்டு தோட்டாக்கள் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது குருதி ஆட்டம் என்னும் படத்தை இயக்கியுள்ளார். இதில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி,கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது.
சமீபத்திய இவரது படம் கலவையான விமர்சங்களை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது நீண்ட நாள் காதலியான சுஹாசினியை நேற்று கரம் பிடித்தார். மிகவும் எளிமையாக நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்தான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
நாடக கலைஞர் மற்றும் நடிகை, மாடல் என பன்முகம் காட்டி வருபவர் சுகாஷினி இவர் சீதக்காதி,நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் மற்றும் சுகாஷினி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது இவர்கள் காதல் திருமணமான பந்தமாக மாறியுள்ளது.