போல்கோ டாட் புடவையில் ஃபேஷன் டிரெண்டை மாற்றிய மாதுரி தீக்‌ஷித்..!!

First Published | Sep 8, 2022, 7:43 PM IST

இந்தி திரைத்துறையில் 90-களில் முற்பகுதியில் அறிமுகமானவர் மாதுரி தீக்‌ஷித். தனது வசீகர சிரிப்பாலும் துள்ளலான நடனத்தாலும் இளம் வயதிலேயே பாலிவுட் சினிமாவின் கனவுக்கன்னியாக உயர்ந்தார்.  வெறும் நடிகையாக மட்டும் இருந்துவிடாமல், தன்னை ஒரு ஃபேஷன் ஐக்கானாகவும் அப்போதே நிலைநிறுத்துக் கொண்டுவிட்டார். இந்தியத்தன்மையுடன் கூடிய ஆடைகளும் சரி, மேலைநாட்டு ஆடை வடிவமைப்பும் சரி அவருக்கு கச்சிதமாக பொருந்தக்கூடியதாக இருந்தது. தற்போது 55 வயதான மாதுரி, இப்போதும் இந்திப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயத்தில் ஃபேஷன் துறையிலும் அவருக்கான ஆர்வம் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் போல்கோ டாட் வடிவமைப்பிலான புடவையுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், ஃபேஷன் உலகில் புதிய டிரெண்டை ஏற்படுத்தியுள்ளது.
 

ரெட்ரோ கிளாமர்

கவர்ந்திழுக்கும் சிவப்பு நிறத்தில், உள்ளங்கை அளவுக்கு வட்ட வட்டமான வடிவமைப்புடன் கூடிய போல்கோ டாட் புடவை மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருந்தது. அதை தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு ஃப்ளீட்ஸ் எடுத்து முந்தானையுடன் கூடி புடவையாக அணிந்திருந்தார் மாதுரி. மாராப்புக்கும் இடை மடிப்புக்கும் இடையே அவர் அணிந்திருந்த தங்க நிறத்திலான பெல்டு, மிகவும் பொருத்தமாக இருந்தது. அதேற்கேற்றவாறான சிகை அலங்காரம் மற்றும் பஃப் வைக்கப்பட்ட மேல் சட்டை என பழமையும் புதுமையும் கலந்து இருந்தது. 

ஃபேஷனுக்கு மரியாதை

மாதுரி அணிந்திருக்கும் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வடிவமைப்பு கொண்ட போல்கோ டாட் புடவைக்கு, பஃப் கை வைத்து மேல் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறுத்துக்கு நேர் எதிரான நிறத்தில் மேல் சட்டை இருப்பதால், அதை தனியாக எடுத்துக் காட்டு, அவர் இடுப்பில் பெல்டு அணிந்திருந்தார். அதற்கேற்றவாறு அவர் போட்டாவுக்கு போஸ் கொடுத்த விதம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஒப்பனை

இந்த புகைப்படத்தில் அவருடைய உடை அலங்காரத்தை கடந்து, கண்ணுக்காக மாதுரி செய்துள்ள ஒப்பனை கவனம் பெறுகிறது. விங்கிடு ஐலைனர் கொண்டு, தன் கண் இமையை மிகவும் பொருத்தமாக நீட்டிவிட்டுள்ளார். உதட்டுக்கு பளபளப்பான உதட்டுச்சாயம் கொடுத்து, பார்க்கவே அழகு தேவதை போல இருக்கிறார்.

கீர்த்திசுரேஷ், சாய் பல்லவி, மோகன்லால், மீரா ஜாஸ்மின் ஆகிய 20 பிரபலங்களின் ஓணம் பண்டிகை செலெப்ரேஷன் போட்டோஸ்.!
 

Tap to resize

திருத்தமான ஆடைத் தேர்வு

நடிகை மாதுரி தற்போது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். இந்த ஆடையை அந்நிகழ்ச்சிக்காகவே அவர் அணிந்துள்ளார். அந்நிகழ்ச்சியில் மாதுரியில் ஆடை மற்றும் புடவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.

மாதுரிக்கு பல்வேறு உடைகள் மிகவும் கச்சிதமாக பொருந்தும். அதில், புடவை அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். தன் ஒவ்வொரு படத்திலும் பல்வேறு மார்டன் உடைகளில் அவர் தோன்றினாலும், புடவையில் ஒரு காட்சியிலாவது நடிக்க அவர் மிகவும் விரும்புவார். வட இந்தியாவில் வாழ்ந்தாலும், தமிழகத்தின் காஞ்சிபுரம் பட்டு மாதுரிக்கு மிகவும் பிடிக்கும். 

இரு மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நயன்தாரா.. வெளியானது காட் ஃபாதர் ரிலீஸ் டேட்
 

Latest Videos

click me!