ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் 3. தனுஷ் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், அறிமுகமானதே இப்படத்தின் மூலம் தான். குறிப்பாக இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் ஹிட் ஆனது.