பிரியா பவானி சங்கர்:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல் வரை' என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க துவங்கினார். பின்னர் ஜோடி நம்பர் ஒன், ஃபிலிம் பேர் அவார்ட்ஸ் சவுத், சூப்பர் சிங்கர் 5, கிங் ஆப் டான்ஸ், போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ப்ரியா பவானி ஷங்கர், அதிரடியாக 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இதன் பின்னர் ப்ரியா பவானி ஷங்கர் தேர்வு செய்து நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மண பெண்ணே, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம், ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான, டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜீப்ரா என்கிற தெலுங்கு திரைப்படத்திலும், இந்தியன் 3 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக மாறிய நடிகைகளில் மிக முக்கியமானவர் பிரியா பவானி சங்கர்.
1330 திருக்குறளை விட உயர்ந்த பாடல்! எது தெரியுமா? என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதை பகிர்ந்த வாலி!