வலியால் துடித்த சாச்சனா; அக்கறை காட்டிய அருணை பலிகடா ஆக்கி கேம் ஆடும் கேர்ள்ஸ்

Published : Oct 22, 2024, 09:31 AM IST

Bigg Boss Tamil Season 8 : பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயிற்று வலியால் துடித்த சாச்சனா மீது அக்கறை காட்டிய அருண் பிரசாத்தை வைத்து சக போட்டியாளர்கள் கேம் ஆடி உள்ளனர்.

PREV
14
வலியால் துடித்த சாச்சனா; அக்கறை காட்டிய அருணை பலிகடா ஆக்கி கேம் ஆடும் கேர்ள்ஸ்
Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. 16 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். முதல் இரண்டு வாரங்கள் நடந்த எலிமினேஷனில் ரவீந்தர் மற்றும் அர்னவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது 16 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் 8 போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர்.

24
Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் ஆண்கள் வெர்சஸ் பெண்கள் என்கிற தீமில் நடத்தப்படுகிறது. இதனால் ஆண் போட்டியாளர்கள் ஒரு புறமும், பெண் போட்டியாளர்கள் ஒரு புறமும் பிரிக்கப்பட்டு அவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வீட்டின் நடுவே கோடு ஒன்றும் போடப்பட்டு, அதை தாண்டினால் தண்டனை கொடுக்கவும் இரண்டு தரப்புக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ஆண், பெண் தனித்தனி அணியாக இருந்தாலும் அதில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர் மட்டும் வார வார அணிமாறி விளையாடுவர்.

இதையும் படியுங்கள்... உன் வன்மத்தை கக்குற இடம் இதுஇல்ல! திமிரா பேசிய அர்னவ்; திட்டி வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி

34
Bigg Boss Tamil season 8

அந்த வகையில் இந்த வாரம் ஆண்கள் அணியை சேர்ந்த ஜெஃப்ரி பெண்கள் அணிக்காகவும், பெண்கள் அணியை சேர்ந்த சாச்சனா ஆண்கள் அணிக்காகவும் விளையாடி வருகிறார். சாச்சனா இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் இருந்தே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது வயிற்று வலியால் துடித்த சாச்சனாவை ஆண்கள் அணியை சேர்ந்த அருண் பிரசாத், சாச்சனா மீதிருந்த அக்கறையால் அவரை பெண்கள் அணிபக்கம் இருந்த கன்பெஷன் ரூமுக்கு அழைத்து சென்றார்.

44
Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் வீட்டின் விதிப்படி ஆண்கள் அனுமதியின்றி கோட்டை தாண்டக்கூடாது. ஆனால் அருண் பிரசாத், சாச்சனா மீதிருந்த பாசத்தால் அவரை கோட்டைத் தாண்டி அழைத்து சென்றிருக்கிறார். இதைவைத்து கேம் ஆட முடிவெடுத்த பெண்கள், அருண் ரூல்ஸை மீறியதால் நாமினேஷன் ஃப்ரீ பாஸை ரத்து செய்யப்போவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனந்தி, சுனிதா ஆகியோர் இதைப்பற்றி பேசும் புரோமோ வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் மனிதாபிமானமே இல்லாம இப்படியெல்லாமா கேம் ஆடுவீங்க...ரொம்ப சீப்பா இருக்கு என வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்?

click me!

Recommended Stories