மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

First Published | Oct 22, 2024, 10:08 AM IST

Meiyazhagan OTT Release : பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Meiyazhagan movie karthi, arvind swamy

96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டு இடைவெளிக்கு பின் தமிழில் இயக்கிய படம் மெய்யழகன். இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் நடிகர் அரவிந்த் சாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மெய்யழகன் திரைப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்து இருந்தனர்.

Meiyazhagan

குடும்பப்பாங்கான திரைப்படமாக இருந்த மெய்யழகன் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்து இருந்தார். இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனபோது சில காட்சிகள் டல் அடிப்பதாக விமர்சனம் எழுந்ததை அடுத்து உடனடியாக படத்தில் இருந்து 18 நிமிட காட்சியை கத்திரி போட்டு தூக்கியது படக்குழு, அதை பலனாக படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகி வசூலையும் வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை மூன்றே நாளில் அசால்டாக தட்டிதூக்கிய மெய்யழகன்!

Tap to resize

Meiyazhagan Movie

மெய்யழகன் திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், ரஜினியின் வேட்டையன் பட வரவால் அப்படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது. வழக்கமாக தமிழ் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்படும். அதன்படி மெய்யழகன் திரைப்படம் வருகிற அக்டோபர் 25-ந் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் ட்விஸ்டாக மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது.

Meiyazhagan OTT Release Date

அதன்படி அக்டோபர் 25-ந் தேதிக்கு பதிலாக அப்படத்தின் புது ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அந்த வகையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மெய்யழகன் திரைப்படம் வருகிற அக்டோபர் 27-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மூன்று தினங்களில் தீபாவளி வருவதால் அதை கணக்கு பண்ணி மெய்யழகன் பட ஓடிடி ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... ரூ.3300 கோடி பிஸ்னஸ்! வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி!

Latest Videos

click me!