தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் தயாராகி வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்காக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி வீட்டிலேயே பயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம் சூர்யா. சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... துணிவு படத்தில் நடிக்க... லட்சத்தில் அல்ல கோடியில் சம்பளம் வாங்கிய மஞ்சு வாரியர்! எவ்வளவு தெரியுமா?
இதுதவிர சுதா கொங்கரா உடன் ஒரு படம் மற்றும் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் உடன் ஒரு படம் என வரிசையாக லைன் அப் வைத்துள்ள சூர்யா, தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சூர்யா நாயகனாக நடிக்க உள்ள அந்த திரைப்படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் கூட கேரளா சென்றிருந்த சூர்யா, பிருத்விராஜை சந்தித்து புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்த படம் குறித்து ஆலோசிக்க தான் அவர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யா - பிருத்விராஜ் கூட்டணியில் உருவாக உள்ள இது ஒரு பயோபிக் படம் எனவும், பிரபல பிஸ்கட் கம்பெனியான பிரிட்டானியாவின் நிறுவனர் ராஜன் பிள்ளையின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை பிருத்விராஜ எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது. நடிகர் பிருத்விராஜ் ஏற்கனவே மலையாளத்தில் லூசிபர் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஜய் டிவி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சி? இது தான் டைட்டிலா..!