ஒரே நாளில் டிவி மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிரசாந்தின் அந்தகன் - எப்போ தெரியுமா?

First Published | Oct 28, 2024, 7:36 AM IST

டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற அந்தகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Andhagan

தமிழ் திரையுலகில் டாப் ஸ்டாராக வலம் வருபவர் பிரசாந்த். இயக்குனர் தியாகராஜனின் மகனான இவர், சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். 1990-களில் விஜய், அஜித்துக்கு நிகராக கொண்டாடப்பட்ட ஒரு ஹீரோவாக இருந்த பிரசாந்த், அதன் பின்னர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். பின்னர் தன் தந்தையின் இயக்கத்தில் அவ்வப்போது ஒரு படத்தில் மட்டும் நடித்து வந்த பிரசாந்த், தரமான கம்பேக் கொடுக்க காத்திருந்தார்.

Andhagan Movie

அவரின் காத்திருப்புக்கு கிடைத்த பரிசு தான் அந்தகன் திரைப்படம். இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற படம் அந்தாதூண். ஆயுஷ்மான் குரானா நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. அப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய தியாகராஜன், பிரசாந்தை வைத்து தமிழில் அந்தகன் என்கிற பெயரில் ரீமேக் செய்தார். இப்படத்தை தயாரித்தது மட்டுமின்றி இயக்கியும் இருந்தார் தியாகராஜன்.

இதையும் படியுங்கள்... இப்படி ஒரு பெண் கிடைத்தால் போதும்.. 2-வது திருமணம் குறித்து நடிகர் பிரசாந்த் சொன்ன குட்நியூஸ்..

Tap to resize

Andhagan Movie Team

அந்தகன் படத்தின் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இதுதவிர சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந் தேதி திரைக்கு வந்தது. இந்தியில் இருந்த அதே விறுவிறுப்போடும், பரபரப்போடும் இப்படத்தை இயக்கி தன் மகன் பிரசாந்துக்கு தரமான கம்பேக் படமாக கொடுத்திருந்தார் தியாகராஜன். இப்படம் தமிழிலும் சூப்பர் ஹிட் ஆனது.

Andhagan Prashanth

அந்தகன் படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆக உள்ள நிலையில், இன்னும் அப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யவில்லை. அப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று அனைவரும் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அந்தகன் திரைப்படம் தீபாவளி விருந்தாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற அக்டோபர் 30ந் தேதி அப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் என கூறப்படுகிறது.

Andhagan OTT Release

ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் அதே தேதியில் அந்தகன் திரைப்படம் டிவியிலும் ஒளிபரப்பாக உள்ளது. வருகிற அக்டோபர் 30ந் தேதி ஆஸ்ட்ரோ வின்மீன் என்கிற வெளிநாட்டு சேனலில் இப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அன்றைய தினமே ஓடிடியிலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு ஏற்கனவே லப்பர் பந்து, தங்கலான் ஆகிய படங்கள் ஓடிடிக்கு வர உள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது அந்தகனும் இணைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... ஹெல்மெட் போடாமல் பேட்டி கொடுத்து Fine கட்டிய பிரஷாந்த்! செய்தியாளர் சந்திப்பில் கொடுத்த விளக்கம்!

Latest Videos

click me!