1979, அதாவது ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலம் அது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து திரைப்படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிசியான நடிகராக வலம் வந்த அவருக்கு மன ரீதியாக பிரச்சனைகள் இருப்பதாக பெரும் பரபரப்பு தரும் செய்திகள் வெளியானது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான "தர்மா யுத்தம்", "தாய் இல்லாமல் நான் இல்லை", "நான் வாழவைப்பேன்" மற்றும் சில தெலுங்கு திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இந்த சூழலில் தொடர்ச்சியாக ரஜினிகாந்தை வைத்து திரைப்படங்களை எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கி வந்ததாகவும் சில தகவல்கள் அப்பொழுது வெளியானது.