கண்ணதாசனை விட நான்கு வயது சிறியவர் என்றாலும், தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி நடத்திய இரு மாபெரும் பாடல் ஆசிரியர்கள் தான் வாலியும், கண்ணதாசனும். இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக சண்டை இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் மிகச் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தவர்கள் அவர்கள். ஒருமுறை வாலியை பார்த்த கண்ணதாசன், என்னுடைய இறப்புக்குப் பிறகு எனக்காக ஒரு பாடலை நீ கட்டாயம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அப்படி கண்ணதாசன் சொல்லி வெகு சில மாதங்களில் அவர் காலமான நிலையில், அவருக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற வாலி "படிக்கத் தெரியாத எத்தனையோ பேரில் எமனும் ஒருவன், அழகிய கவிதை புத்தகத்தை கிழித்துப் போட்டு விட்டான்" என்று மனம் நொந்து பேசினாராம்.