vijay
தவெக மாநாட்டில் அரசியல் அனல்பறக்க பேசிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தன்னுடைய எதிரிகள் யார் என்பதையும் நெற்றிப்பொட்டில் அடித்தவாரு கூறினார். அவர் பேசியதாவது : “பிளவுவாத சக்திகள் கூட யாருன்னு ஈஸியாக நாம் கண்டுபிடித்து விடலாம். ஏனெனில் அது ஒரு மதம் பிடித்த யானை மாதிரி. ஆனா இந்த ஊழல் இருக்கே, அது எங்க ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும், அதுக்கு முகமே இருக்காது; முகமூடி தான் இருக்கும். இப்படி முகமூடி போட்ட கரப்ஷன் கபடதாரிகள் தான் இப்போ நம்ம கூடவே இருந்துகொண்டு, நம்மள ஆண்டுகொண்டும் இருக்கிறார்கள்.
TVK Vijay
நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்திகள், நம்முடைய இன்னொரு எதிரி இந்த கரப்ஷன் கபடதாரிகள். யார் இங்க வரவேண்டும், யார் இங்க வரவே கூடாது என்பது நம் மக்களுக்கு தெளிவாக தெரியும். ஏனெனில் இது மதச்சார்பின்மை பேசும் தமிழ்நாட்டு மண். எம்.ஜி.ஆர், அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் எல்லாம் பிறந்த மண். இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் எல்லாம் அவரவர் வழிபாட்டு தளங்களிலும் வாழ்க்கை முறையில் மட்டும் தான் இருக்கும்.
இதையும் படியுங்கள்... கப்பு முக்கியம் பிகிலு! தவெக மாநாடு நடத்தும் விஜய்க்கு வாழ்த்து மழை பொழிந்த கோலிவுட் ஸ்டார்ஸ்
Vijay Maanadu
ஆனா ஒட்டுமொத்தமா தமிழ்நாடுன்னு வந்துவிட்டால், ரொம்ப கஷ்டம். ரீசண்டா தமிழ்நாட்டில் என்ன நடந்ததென்று நீங்களே பார்த்திருப்பீர்கள். இங்க சாதி இருக்கும், ஆனா சைலண்டா மட்டும் தான் இருக்கும். சமூக நீதிக்கான அளவுகோளாக மட்டும் தான் அது இருக்கும். அதைவைத்து நம் மண்ணை வேறமாதிரி மாற்ற யார் என்னவெல்லாம் முயற்சித்தாலும், அதை நம் மக்களே அனுமதிக்க மாட்டார்கள். உன்னுடைய எதிரி யார் என்று சொல்லிவிட்டால் போதுமா... அதுதான் உன் அரசியலா என்று கேட்டால்; இல்லை என்று தான் சொல்லுவேன்.
Vijay Speech
மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல் தான். மக்களில் ஒருவனாக, அவர்களுக்கான ஒருவனாக, எப்போதும் மாறாத இந்த குணத்தோட, மனசோட களத்தில் நிற்பது தான் எங்களது நிரந்தர அரசியல் பாதை. எக்ஸாம் எழுதுன உடனே ரிசல்ட் வருவது போல் நல்ல ரிசல்ட் கொடுக்கும் திட்டங்கள் இங்கு இருக்க வேண்டும். அதை முறையாக அமல்படுத்த வேண்டும். அது மக்களிடம் போய் சேர வேண்டும், போய் சேர்ந்ததா என பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
TVK Maanaadu Vijay Speech
சோறு சாப்பிட்டால் தான் பசி ஆறும், சோறு என்கிற வார்த்தையை சொல்வதால் பசி ஆறாது. மக்களுக்காக நாம் கொண்டுவரும் திட்டங்கள் எல்லாம் செயல்வடிவம் பெறும் திட்டங்களாக இருக்க வேண்டும் சும்மா உதார் விடும் திட்டங்களாக இருக்கக் கூடாது. மீன் பிடித்து கொடுக்கக்கூடாது அது தப்பு என்றும், மீன் பிடிக்க சொல்லி கொடுக்கனும் அதுதான் சரி என சிலர் சொல்லிக்கொண்டு சுத்துவார்கள். ஆனால் நாங்க அப்படி இல்ல எங்க கான்செப்டே வேற. முடிஞ்சவங்க மீன் பிடிக்க கத்துக்கிட்டு வாழட்டும், முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சு கொடுத்து அவங்கள வாழவைப்போம்” என விஜய் சூளுரைத்தார்.
இதையும் படியுங்கள்... "ஆளுநர் தேவையில்லை", "தமிழகத்தில் இரு மொழி கொள்கை" த.வெ.க-வின் செயல்திட்டம் அறிவிப்பு!