கப்பு முக்கியம் பிகிலு! தவெக மாநாடு நடத்தும் விஜய்க்கு வாழ்த்து மழை பொழிந்த கோலிவுட் ஸ்டார்ஸ்

First Published | Oct 27, 2024, 3:09 PM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

TVK Maanaadu

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான முதல் மாநில மாநாட்டை இன்று நடத்த இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் தான் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், விஜய்யின் மாநாடு வெற்றிபெற வேண்டியும், அவரின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தும் திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதை விரிவாக பார்க்கலாம்.

jayam Ravi

ஜெயம் ரவி

உங்கள் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. நீங்க சினிமாவில் எந்த அளவுக்கு முனைப்புடனும், அர்ப்பணிப்புடனும் இருந்தீர்களோ அதை அரசியலிலும் கொண்டுவாருங்கள். உங்களின் இந்த புதிய பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் ஜெயம் ரவி.

Tap to resize

Director Mohan Raja

மோகன் ராஜா

ஜெயம் ரவியின் சகோதரரும் இயக்குனருமான மோகன் ராஜா, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து போட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வேலாயுதம் படம் ரிலீஸ் ஆகிஅ 13 ஆண்டுகள் ஆகும் இந்த நாளில் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தவெக மாநாடு மூலம் அவர் போடும் அடித்தளம் காலம் காலமாக தொடரட்டும் என வாழ்த்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... தவெக மாநாட்டை தொகுத்து வழங்க; விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளை களமிறக்கிய தளபதி!!

Sivakarthikeyan, Vijay

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்தியன் போட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டு ஹார்டின் எமோஜியையும் பறக்கவிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்.கே.

Karthik Subbuaraj

கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா, பேட்ட, மகான், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், விஜய் சாருக்கு வாழ்த்துக்கள், உங்களின் புதிய பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டு விஜய் தவெக கொடியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Shantnu, Vijay

சாந்தனு

நடிகரும், விஜய்யின் தீவிர ரசிகனுமான சாந்தனு தன்னுடைய எக்ஸ் தள பதிவில், விஜய் அண்ணாவுக்கு இது பெரிய நாள். உங்கள் முதல் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் அண்ணா, அவரின் பேச்சை கேட்கவும், தவெக கட்சியின் கொள்கைகளை அறியவும் ஆவலோடு இருக்கிறேன் என சாந்தனு பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... தவெக மாநாட்டுக்கு விட்றா வண்டிய! அஜித் பஸ் ஓட்ட; ரஜினி டிக்கெட் கொடுக்க; இதென்ன புது கூத்தா இருக்கு!

Latest Videos

click me!