Sivakumar, Suriya
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி உள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார். கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
Kanguva Suriya
கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மேலும் கருணாஸ், நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சி உள்ளதால் தற்போது அதற்கான புரமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. பான் இந்தியா அளவில் கங்குவா படத்தை புரமோட் செய்து வருகிறார் சூர்யா.
இதையும் படியுங்கள்... "கங்குவா எனக்காக எழுதப்பட்ட கதை" இசை வெளியீட்டு விழாவில் சிவாவை மாட்டிவிட்ட ரஜினி!
Kanguva movie
கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமின்றி நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி, தந்தை சிவக்குமார் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையேறி பேசிய சூர்யாவின் தந்தை சிவக்குமார், அவருக்கு கல்லூரியில் சீட் தர மறுத்த கதையையும் சூர்யா அரியர் வைத்து படித்தையும் பற்றி பேசினார்.
Suriyas Arrear Story
அவர் பேசியதாவது : “சூர்யாவுக்கு லயோலா கல்லூரியில் பி.காம் படிக்க விண்ணப்பிக்க சென்றபோது இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் நான் சென்று, பிரின்சிபலை பார்த்து என்ன பிரச்சனை என கேட்டேன். அவர், சிவாஜி கணேசன் பையன் பி.காம் முடிக்காம பாதியிலேயே போயிட்டாரு, இன்னும் இரண்டு பிரபலங்களின் மகன்களும் அதேபோல் படிப்பை பாதியிலேயே விட்டு சென்றுவிட்டார்கள். உங்க பையனும் அதுபோன்று செய்வான் என சொன்னார். இல்ல என் பையன் நிச்சயம் பி.காம் முடிப்பான்னு சொல்லி சீட் வாங்குனேன். ஆனா கடைசி வருஷத்துல நான்கு அரியர் வச்சிருந்தான். டேய் ராஜா மானத்தை வாங்கிடாதடானு சொன்னேன். எப்போடியோ கஷ்டப்பட்டு படிச்சு பி.காம் டிகிரி வாங்கிட்டான் என சிவக்குமார் சொன்னதை கேட்ட சூர்யா, அய்யோ மேடையில் மானத்தை வாங்குறாரே என தலையில் கைவைத்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே வேட்டையன், கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய கங்குவா!