தவெக மாநாட்டுக்கு விட்றா வண்டிய! அஜித் பஸ் ஓட்ட; ரஜினி டிக்கெட் கொடுக்க; இதென்ன புது கூத்தா இருக்கு!

First Published | Oct 27, 2024, 11:53 AM IST

நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டுக்கு செல்ல அஜித் பஸ் ஓட்டி வரும்படியும், ரஜினிகாந்த் டிக்கெட் கொடுக்கும் படியான மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியின் முதல் மாநாடு இன்று மாலை விக்ரவாண்டியில் உள்ள வி சாலை எனும் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் திடலில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் வந்ததால் இன்று காலையிலேயே மாநாடு நடைபெறும் திடல் முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

TVK Vijay

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடில் 5 முதல் 6 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்காக சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் நிர்வாகிகளுக்கு ஏதுவாக மொத்தம் 5 நுழைவு வாயில்கள் இங்கு அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் மாநாடு முடிந்து வெளியே விரைவாக செல்ல 15 வழிகள் தனியாக அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இதையும் படியுங்கள்... விஜய்யின் தவெக மாநாடு எதிரொலி; டாஸ்மாக் கடைகளுக்கு ஒருநாள் லீவு!!

Tap to resize

TVK Maanadu

மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பார்க்கிங் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாடு திடலின் இருபுறமும் இந்த பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. கார்கள், வேன்கள் என மொத்தம் 5 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் இந்த பார்க்கிங் ஏரியா அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி மாநாட்டுக்கு வரும் மக்களுக்காக சப்பாடு வசதியும் செய்யப்பட்டு, சுட சுட உணவுகளும் பரிமாறப்பட்டு வருகின்றன.

TVK Maanadu Memes

இப்படி விஜய்யின் மாநாட்டு திடல் மட்டுமின்றி சோசியல் மீடியாவும் இன்று தவெக மாநாடு பற்றிய செய்திகள் தான் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில் விஜய் ரசிகர்கள் போட்டுள்ள மீம் ஒன்றும் செம்ம வைரலாகி வருகிறது. அந்த மீமில் மாநாட்டுக்கு செல்லும் பஸ்ஸை அஜித் ஓட்டுவதாகவும் அந்த பஸ்ஸில் ரஜினிகாந்த் டிக்கெட் கண்டெக்டராகவும் இருப்பதாகவும் அந்த பஸ்ஸில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், அனிருத், சிவகார்த்திகேயன், திரிஷா, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பயணிக்கும் படியும் சித்தரித்து போட்டுள்ளனர். அந்த மீமை பார்த்த நெட்டிசன்கள் அநியாயம் பண்றீங்கடா என கமெண்ட் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... கட்டுக்கடங்காத கூட்டம்; காலையிலேயே ஹவுஸ்புல் ஆன தவெக மாநாட்டு திடல்!!

Latest Videos

click me!