தர்ஷா குப்தாவுக்கு சம்பளத்தை வாரி வழங்கிய பிக்பாஸ்; 20 நாளுக்கு இத்தனை லட்சமா?

First Published | Oct 27, 2024, 9:06 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இந்த வாரம் எலிமினேட் ஆன நடிகை தர்ஷா குப்தாவுக்கு வழங்கப்பட்ட சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

Dharsha gupta Eliminated

கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா, பெங்களூருவில் டீச்சராக பணியாற்றி வந்தார். இதையடுத்து மாடலிங் மீது ஆர்வம் வந்து சென்னைக்கு ஷிஃப்ட் ஆன தர்ஷா, கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பேமஸ் ஆனார். அந்த போட்டோஷூட் மூலம் தர்ஷாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதையடுத்து இரட்டை ரோஜா போன்ற தொடரில் நடித்த தர்ஷாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Bigg Boss Dharsha Gupta

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷா, அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் அவருக்கு சினிமாவிலும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அவர் முதன்முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின்னர் சன்னி லியோன் உடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற பேய் படத்திலும் நடித்திருந்தார் தர்ஷா.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் 8 வீட்டை விட்டு இந்த வாரம் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!

Tap to resize

Dharsha Gupta Salary

சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு சினிமாவில் கிடைக்காததால் தர்ஷாவுக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள முடிவெடுத்த தர்ஷா, கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். அந்நிகழ்ச்சியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் தர்ஷாவும் ஒருவர். ஆனால் அவரின் ஆட்டம் ரசிகர்களை கவரத் தவறியது.

Dharsha Gupta For Bigg Boss Tamil Season 8

இதனால் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்று இருந்த தர்ஷா, குறைவான வாக்குகளை பெற்றதால் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த சீசனில் எலிமினேட் ஆகும் முதல் பெண் போட்டியாளர் தர்ஷா குப்தா தான். அவருக்கு பிக்பாஸில் வழங்கப்பட்ட சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வாங்கிய தர்ஷா, பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 20 நாட்கள் தங்கி இருந்தார். அதற்காக அவருக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... 'அமரன்' பட புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சிவகார்த்திகேயன்! வெளியானது அச்சத்தில் புரமோ!

Latest Videos

click me!