கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மிருதன்", அதைத் தொடர்ந்து வெளியான "போகன்", "வனமகன்", "டிக் டிக் டிக்", "அடங்குமாறு" மற்றும் "கோமாளி" போன்ற திரைப்படங்கள் ஜெயம் ரவியின் நடிப்புத் திறனை வெளிக்காட்டும் மிகச் சிறந்த திரைப்படங்களாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், அருள்மொழி வர்மனாகவே வாழ்ந்தார் ஜெயம் ரவி என்றால் அதில் மிகையல்ல. இப்படி தொடர்ச்சியாக தன்னுடைய நேர்த்தியான நடிப்பை அவர் வெளிப்படுத்தி வந்த சூழலில் தான் இந்த ஆண்டு தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக பரபரப்பு தகவல் ஒன்றை அவர் வெளியிட்டார்.