பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட அறிக்கையின்படி, ரஜினிகாந்தின் உடல்நிலைக்காகத் தான் ஸ்ரீதேவி இதையெல்லாம் செய்திருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு பிரபல நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அறிந்த ஸ்ரீதேவி, ஷீரடி சாய்பாபாவின் பெயரில் விரதம் ஏற்றார். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். புனே சாய்பாபா கோயிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகளும் செய்துள்ளார் அவர்.
2011ம் ஆண்டு ரஜினிகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது, அவர் ரவிக்குமாரின் ராணா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். இருப்பினும், ஸ்ரீதேவியின் உண்ணாவிரதத்தாலும், அனைத்து ரசிகர்களின் பிரார்த்தனையாலும், ரஜினிகாந்த் ஆரோக்கியமாக மீண்டு வந்தார்.