சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், நடிகை ஜெயலலிதா, எம்.என் நம்பியார், நாகேஷ், ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "குடியிருந்த கோவில்". இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தது விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம் பெற்றிருக்கும், அவை எல்லாமே சூப்பர் ஹிட். இந்த படமும் மெகாஹிட்டான படம். இப்படத்தில் வந்த எட்டு பாடல்களில் வாலிபக் கவிஞர் வாலி நான்கு பாடல்களுக்கு பாடல் ஆசிரியராக பணியாற்றினார். ஆலங்குடி சோமு மற்றும் புலமைப்பித்தன் ஆகிய இருவரும் இரண்டு பாடல்களை எழுத ரோஷனாரா பேகம் என்பவர் ஒரு பாடலை இந்த திரைப்படத்தில் எழுதியிருந்தார். கோவையை சேர்ந்த பேகத்தின் தந்தை முஸ்தபாவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனும் நெருங்கிய நண்பர்களாம். இந்த சூழலில் தான் பேகத்தை தன்னுடைய திரைப்படத்தில் பாடல் ஒன்று எழுத அழைத்திருக்கிறார் விஸ்வநாதன்.