கமலின் மெகா ஹிட் படத்திற்கு "நோ" சொன்ன இளையராஜா - கடைசியில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்!

First Published | Oct 26, 2024, 4:51 PM IST

Kamal and Ilayaraja : இளையராஜா மற்றும் கமலஹாசன் காம்பினேஷனில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் கமலின் திரைப்படத்திற்கே நோ சொல்லியிருக்கிறார் இளையராஜா.

Kamal and Ilayaraja

தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற இரண்டு மிகச்சிறந்த கலைஞர்களாக வளம் வருபவர்கள் தான் இசைஞானி இளையராஜா மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிற நடிகர்களை ஒப்பிடும் பொழுது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு தான் அதிக அளவிலான சிறந்த பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக கமலஹாசன் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வெளியான "வாழ்வே மாயம்" திரைப்படம், பாடல்களுக்காக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

சன் டிவியில் இருந்து விலகி.. ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய சீரியல் ஹீரோயின்!

Ilayaraja

அது மட்டுமல்ல 1989ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன "வெற்றி விழா", 1986 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி பாடல்களுக்காகவே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற "நானும் ஒரு தொழிலாளி". "அந்த ஒரு நிமிடம்", "பெயர் சொல்லும் பிள்ளை", "அபூர்வ ராகங்கள்", "கல்யாண ராமன்", "கலைஞன்", "மைக்கேல் மதன காமராஜன்", "16 வயதினிலே", "உயர்ந்த உள்ளம்", "தூங்காதே தம்பி தூங்காதே", "சகலகலா வல்லவன்", இப்படி எத்தனையோ மெகா ஹிட் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் தான் உலகநாயகன் கமல்ஹாசனும் இளையராஜாவும்.

Tap to resize

Kamal

இந்த சூழலில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் கமல்ஹாசனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம் தான் "விருமாண்டி". முதலில் இந்த திரைப்படம் "சண்டியர்" என்கின்ற தலைப்புடன் தான் வெளியாவதாக இருந்தது. கமலின் திரை வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மூன்று முக்கிய கதாபாத்திரங்களை சுற்றித்தான் இந்த திரைப்படம் நகரும். அது மட்டுமல்ல இந்த திரைப்படத்தில் பாடல்களும் அவ்வளவு அருமையாக இருக்கும். இளையராஜாவின் பின்னணி இசை விருமாண்டி திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்தது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை லைவ் ரெக்கார்டிங் முறையை பயன்படுத்தி டப்பிங் பேசப்பட்ட வெகு சில திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இந்த திரைப்படத்திற்கு தான் முதலில் இசையமைக்க மறுத்திருக்கிறார் இளையராஜா. 

Virumandi

ஆனால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது, பொதுவாக கதைகளத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டு தான் இளையராஜா இசையமைக்க தொடங்குவார். அப்படி இருக்கையில், கமலஹாசன் தன்னுடைய சில உதவி இயக்குனர்களை இளையராஜாவிடம் சென்று விருமாண்டி கதையை சொல்லச் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள் தவறுதலாக சண்டை காட்சிகள் இருக்கும் இடங்களை மட்டும் பெரிய அளவில் இளையராஜாவிற்கு சொல்லிய நிலையில், வெறும் சண்டை உள்ள படத்திற்கு நான் ஏன் இசையமைக்க வேண்டும்? என்னால் முடியாது என்று கூறியிருக்கிறார் இளையராஜா. 

அதன் பிறகு இந்த விஷயம் கமல்ஹாசன் காதுக்கு செல்ல, நேரடியாக அவர் வந்து இந்த திரைப்படம் குறித்தும், அதில் உள்ள காட்சி அமைப்புகள் குறித்தும் தொழில்நுட்ப ரீதியாக தான் செய்யப் போகும் விஷயங்கள் குறித்தும் இளையராஜாவிடம் பேச, வியந்து போன இளையராஜா மகிழ்ச்சியோடு அந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா, கமலஹாசன் காம்பினேஷனில் உருவான மெகா ஹிட் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

பிக்பாஸ் 8 வீட்டை விட்டு இந்த வாரம் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!

Latest Videos

click me!