சன் டிவியில் இருந்து விலகி.. ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய சீரியல் ஹீரோயின்!

Published : Oct 26, 2024, 04:07 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், தற்போது சன் டிவி சீரியல் நடிகை அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.   

PREV
14
சன் டிவியில் இருந்து விலகி.. ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய சீரியல் ஹீரோயின்!
Mirchy senthil

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், கடந்த ஆண்டு துவங்கப்பட்ட சீரியல் அண்ணா. சிறு வயதிலேயே கொலை பழியை சுமந்து கொண்டு, அம்மா சிறைக்கு சென்று விடுவதால்... அப்பாவின் துணையோடு, ஒற்றை ஆளாக நின்று தன்னுடைய தங்கைகளை எப்படி ஷண்முகம் காப்பாற்றுகிறார் என்பதே இந்த சீரியலில் கதைக்களம். ஷண்முகம் குடும்பத்தை பழிவாங்க நினைக்கும், சௌந்தர பாண்டி மகள் பரணியையே ஷண்முகம் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது.
 

24
Anna serial

ஆரம்பத்தில் சண்முகத்தை பரணி வெறுத்தாலும் பின்னர், ஷண்முகத்தோடு வாழ ஆசை படுகிறார். இந்நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள கேரக்டர் தான் சரவணன். இவர் ஹீரோ சண்முகத்தை போலவே இருக்கு இருக்கும் மற்றொரு கதாபாத்திரம். சரவணனுக்கு ஜோடியாக கோப்பெரும் தேவி கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் பார்வதி.

பிக்பாஸ் 8 வீட்டை விட்டு இந்த வாரம் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!
 

34
Nithyaram

இவர், எதிர் நீச்சல் 2 தொடரில் நடிக்க உள்ளதால்... அண்ணா சீரியலில் இருந்து அதிரடியாக விலகினார். எனவே அவருக்கு பதிலாக, புதிய கோப்பெரும் தேவி கேரக்டரில், சன் டிவி மலர் சீரியலில் இருந்து விலகிய நடிகை ப்ரீத்தி ஷர்மா நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்த புரோமோவும் வெளியாகி உள்ளது. இந்த பாசமலர் கதையான அண்ணன் சீரியல், சுமார் 400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 
 

44
Preethi Sharma

துர்கா சரவணன் என்பவர் இயக்கி வரும் இந்த தொடர், முழுக்க முழுக்க கிராமத்து கதைகளத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. தொடரில் மிர்ச்சி செந்திலை தவிர, நித்யா ராம், பூவிலங்கு மோகன், ப்ரீத்தா சுரேஷ், ஸ்ரீ லதா, சத்யா, சுனிதா, எஸ் டி பி ரோசரி,  விஜே தாரா, ஹேமா சின்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
 

Read more Photos on
click me!

Recommended Stories