பிக்பாஸ் 8 வீட்டை விட்டு இந்த வாரம் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!

Published : Oct 26, 2024, 02:07 PM ISTUpdated : Oct 26, 2024, 02:08 PM IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

PREV
15
பிக்பாஸ் 8 வீட்டை விட்டு இந்த வாரம் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!
Bigg Boss Tamil Season 8

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பமானத்தில் இருந்து, கடந்த இரண்டு வாரமாக சற்று டல்லடித்தாலும், மூன்றாவது வாரம் சூடு பிடிக்க தொடங்கியது. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாக தங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்த துவங்கியுள்ள நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு மூட்டை முடிச்சியோடு வெளியேறிய போட்டியாளர் யார் என்பதை பார்ப்போம்.
 

25
Bigg Boss Tamil Season 8 This week Elimination

அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். முதல் வாரம் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் கன்டென்ட் கொடுத்து விளையாடி வந்த போதிலும், உடல் அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவரால் ஒத்துழைப்பு தர முடியவில்லை. அதேபோல் இவருடைய மனைவி மகாலட்சுமி பிக் பாஸ் தரப்பிடம் தன்னுடைய கணவரை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. மக்களும், ரவீந்த சந்திரசேகரன் உள்ளே இருந்து கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல், குறைவான வாக்குகளுடன் வெளியேற்றினர்.
இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

35
Tamil cinema latest news

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து, இரண்டாவது எலிமினேஷன் மூலம் அர்னவ் வெளியேறினார்.  அடுத்தடுத்து இரண்டு ஆண் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது மீதமுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

45
Vijay tv Bigg Boss Season 8

இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், தர்ஷா குப்தா, பவித்ரா, அன்சிதா, ஆகியோரின் பெயர் இடம் பெற்ற நிலையில்... இவர்களில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா ஆகியோர் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று சேஃப் சோனில் இருப்பதாக நெட்டிசன்கள்கள் கணித்து கூறினர். இவர்களை தொடர்ந்து, அஞ்சிதா, ஜாக்குலின், பவித்ரா, மற்றும் தர்ஷா  குப்தா ஆகியோர் டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த வாரம் இவர்களில் ஒருவர் தான் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள் என தகவல் வெளியானது.

சீரியல் நடிகையிடம் 50 சவரன் நகையை ஆட்டையை போட்டுவிட்டு திருமணத்தை நிறுத்திய பைலட் மாப்பிள்ளை!

55
Dharsha Gupta Eliminated

இந்த வாரம் நடந்த ஹோட்டல் டாஸ்கில் கிடைத்த, நாமினேஷன் ப்ரீ டாஸ்கை பவித்ரா வென்றதன் மூலம் அவர் சேப் சோனுக்கு சென்றுள்ளார். மீதம் இருந்த ஜாக்குலின், தர்ஷா குப்தா மற்றும் அன்ஷிதா ஆகிய மூன்று போட்டியாளர்களின் இருந்து, இந்த வாரம் தர்ஷா தான் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. 24 மணி நேர நாமினேஷனில் ஒரு பொறியாளரை வெளியேற்ற டாஸ்க் வைக்கப்பட்ட போது, ஒரு மாதத்திற்கு தேவையான டிரஸ் எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வந்துள்ளேன். எனவே குறைந்த பச்சன் ஒரு மாதமாவது பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட தர்ஷா தற்போது வெளியேறி உள்ளது இவரை ஆர்மியை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories