சீரியல் நடிகையிடம் 50 சவரன் நகையை ஆட்டையை போட்டுவிட்டு திருமணத்தை நிறுத்திய பைலட் மாப்பிள்ளை!

First Published | Oct 26, 2024, 8:50 AM IST

சீரியல் நடிகை ஜெனி பிரியா ஏற்கனவே விவாகரத்தான விமான ஓட்டுநர் துநேசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், அவர் நடிகையிடம் 50 பவுன் நகையை ஆட்டையை போட்டு விட்டு திருமணத்தையும் நிறுத்தியுள்ளார். 
 

Jeni Priya Cinema Carrier

சீரியல் நடிகை ஜெனி பிரியா 'வாணி ராணி' சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு கலக்கிய இவர்,  கலைஞர் தொலைக்காட்சியிலும் விஜே-வாக கவனம் பெற்றவர். ஜெனி பிரியா மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வந்தார்.

அதே போல் 'ராஜமன்னர் வகையறா' என்ற என்கிற சீரியலில் லீடு ரோலில் நடித்த ஜெனி பிரியா, இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில்... சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் 2-விலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Serial Actress And Cinema Actress Jeni Priya

இந்நிலையில் இவருக்கு திருமணம் செய்து வைக்க இவருடைய பெற்றோர் முடிவு செய்த நிலையில், வெளிநாட்டில் உள்ள மாப்பிள்ளையை மெட்ரி மோனி மூலம் தேடி வந்தனர். அப்போது தான் ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து பெற்ற துநேசன்  என்பவரின் குடும்பம் ஜெனி பிரியாவின் குடும்பத்தினருக்கு அறிமுகமாகியுள்ளனர். ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் துநேசன்  மீது ஜெபி பிரியாவுக்கு பரிவு ஏற்பட்டதால், அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

'Mr மனைவி' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை! இனி இவருக்கு பதில் இவர்தான்!

Tap to resize

Jeni Priya Wedding

தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, நடிகை ஜெனி பிரியாவுக்கும் துநேசனை மிகவும் பிடித்துப் போனது. இதனால் ஜெனி பிரியா பெற்றோர்...  சென்னையில் மிகவும் எளிமையான முறையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தத்தை முடித்த நிலையில், நவம்பர் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Pilot Groom Cheated Jeni Priya

துநேசன் குடும்பத்தினர் நடிகை ஜெனி பிரியா பெற்றோரிடம், வரதட்சணையாக 200 பவுன் கேட்ட நிலையில் அவர்கள் 100 சவரன் மட்டுமே தருவதாக கூறியுள்ளனர். அதற்கு துநேசன் குடும்பத்தினரும் சம்மதித்தனர். 100 சவரன் நகையை திருமணத்திற்கு பின் விமானத்தில் எடுத்து சென்றால், கஷ்டம் பிரச்சினை வரும் என கூறி இப்போதே நகையை கொடுக்குமாறு கூறி உள்ளனர். ஜெனி பிரியாவின் குடும்பத்தினரும் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை தானே என்று நம்பி 50 சவரன் நகையை கொடுத்துள்ளனர்.

சொந்த அண்ணனிடம் உதவி கேட்டு அசிங்கப்பட்ட கண்ணதாசன்! திட்டி எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!

50 Sawaran Jewellery Cheated

இதன் பின்னர் ஜெனி பிரியாவை சிங்கப்பூருக்கு வரவைத்து துநேசன், அவருடன் விதவிதமான ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தி உள்ளார். மேலும் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, அழைத்துச் சென்றபோது துநேசன்னின் குடும்பத்தினர் தான் இவருடைய முதல் மனைவியை வீட்டை விட்டு துரத்திய சம்பவம் இவருக்கு தெரிய வந்தது. மேலும் இவருடைய மூத்த மகன் நடவடிக்கையும் வித்தியாசமாக இருந்ததை நோட் செய்து தன்னுடைய வருங்கால கணவரிடம் இது பற்றி ஜெனி பிரியா  கேட்க அவன் மொபைல் கேமுக்கு அடிமையாகி இப்படி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Jeni Priya Interview

முதல் மனைவி பற்றி சில தகவல்கள் ஜெனி பிரியாவுக்கு தெரிந்ததை தொடர்ந்து, இது குறித்து அவர் கேள்வி எழுப்பியதால் ஜெனி பிரியாவை துநேசன் தொடர்ந்து தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. போனில் கூட பேசாததால், இந்த திருமணம் தனக்குசெட்டாகாது என நினைத்து தன்னுடைய நண்பர்கள் மூலம் அவரிடம் பேச முயற்சி செய்துள்ளார். அப்போது தன்னிடம் இருக்கும் அவருடைய பொருட்களை சிங்கப்பூர் வந்து வாங்கிக்கொண்டு செல்லும்படி மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளனர்.

'கயல் சீரியல் பிரபலங்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்; ஹீரோவையே மிஞ்சிய ஹீரோயின்!

Jeni Priya Marriage Stoped

நகைகள் மற்றும் அவரிடம் இருந்த தன்னுடைய பொருட்களை பெறுவதற்காக ஜெனி பிரியா சென்றபோது துணிகள் மற்றும் சில பொருட்களை மட்டுமே கொடுத்துள்ளனர். நகையை கேட்ட போது, நகையெல்லாம் நீ தரவே இல்லை எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அந்த சமயத்தில் ஆதரவுக்கு கூட யாரும் இல்லாததால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்த ஜெனிபிரியா, சென்னை வந்த பின்னர் வழக்கறிஞர்கள் மூலம் துநேசன் வேலை செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு மெய்யில் மூலம்  புகார் செய்துள்ளதாகவும், அவர் நகை தொடர்பாக செய்த சாட்டிங் மற்றும் சில வீடியோஸ், போட்டோஸ் போன்ற ஆதாரங்களாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திருமணம் நடைபெற உள்ளதாக திருமண பத்திரிகை முதல் கொண்டு எல்லோருக்கும் கொடுத்து விட்ட நிலையில் தற்போது திருமணம் நின்று போனது மட்டும் இன்றி... 50 சவரன் நகையையும் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!