பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த வனிதா; வறுத்தெடுக்கப்பட்ட அர்னவ் - இறுதியில் என்ன ஆச்சு?

Ansgar R |  
Published : Oct 25, 2024, 10:28 PM IST

Bigg BossTamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய நடிகர் அர்னவை கலாய்த்து தள்ளி இருக்கிறார் பிரபல நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா.

PREV
14
பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த வனிதா; வறுத்தெடுக்கப்பட்ட அர்னவ் - இறுதியில் என்ன ஆச்சு?
Actor Arnav

இதுவரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை, முதல் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வருகிறார். என்ன தான் விஜய் சேதுபதி மிகச்சிறந்த நடுவராக வாரம்தோறும் ஸ்கோர் செய்து வந்தாலும், பிற பிக்பாஸ் சீசன்களை ஒப்பிடும் பொழுது இந்த முறை கொஞ்சம் உப்பு சப்பு இல்லாமல் தான் அனைத்து நாள்களும் நகர்கின்றது என்றால் அது மிகையல்ல. மொத்தம் 18 பேர் கொண்ட போட்டியாக, 9 ஆண்கள் ஒன்பது பெண்கள் என்று ஆரம்பத்திலேயே இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக இம்மாத துவக்கத்தில் தொடங்கப்பட்டது. 

'Mr மனைவி' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை! இனி இவருக்கு பதில் இவர்தான்!

24
bigg boss season 8

இதில் அதிர்ச்சி தரும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கிய 24 மணி நேரத்தில் முதல் போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் ரகசிய அறை வழியாக அந்த போட்டியாளர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பரபரப்பாக நகர்ந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர் முதல் போட்டியாளராக வெளியேறினார். இவர் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக களம் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து கடந்த வாரம் பிரபல சின்னத்திரை நடிகர் அர்னவ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

34
Ravinder

இந்த சூழலில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து மற்றொரு விஷயத்தையும் நடத்தி வருகிறது. அது தான் பிக் பாஸ் சீசன் 8 தமிழ் "ஃபன் அன்லிமிடெட்" என்கின்ற நிகழ்ச்சி. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி செல்லும் நபர்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக இது இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ரவீந்தர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். அவரிடம் கிண்டலாக பல கேள்விகள் கேட்டு அவரை நோஸ் கட் செய்தார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். 

44
Vanitha Vijayakumar

இந்த நிலையில் கடந்த வாரம் எலிமினேட் ஆன அர்னவ், இந்த முறை பிக் பாஸ் ஃபன் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் பங்கேற்றுகிறார். வரும் 27ம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். ஆனால் இன்று வெளியான அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்னவை, பிரபல நடிகை மற்றும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் வனிதா கலாய்த்து தள்ளியுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் நீங்கள் எதுவுமே செய்யவில்லை. நானாக இருந்திருந்தால் அங்கு இருந்தவர்களுக்கு அறை விழுந்திருக்கும். நாங்கள் நினைத்தது போல எதுவுமே நீங்கள் செய்யவில்லை. நீங்கள் ரொம்ப போரான ஆள் என்று பேசியுள்ளார் அவர். 

தளபதி விஜயின் த.வெ.க மாநாடு; 70 அடி பிரம்மாண்ட கட்அவுடில் 2 முக்கிய பெண் தலைவர்கள்! வைரல் பிக்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories