Published : Oct 25, 2024, 07:19 PM ISTUpdated : Oct 25, 2024, 07:32 PM IST
நடிகர் ஜெயம் ரவி, தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாக உள்ள, பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் புரமோஷனுக்காக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், விவாகரத்து சர்ச்சை குறித்தும், மக்கள் தன்னை பற்றி பேசுவது குறித்தும், மனம் திறந்து பேசி உள்ளார் ஜெயம் ரவி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2009 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்த நிலையில், இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
தமிழ் சினிமாவே பொறாமை கொள்ளும் வகையில், ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடி மிகவும் ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய மனைவி உடனான விவாகரத்தை அறிவித்த சம்பவம் திரை உலகில் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
25
Jayam Ravi files Divorce in court
மேலும் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த பலர், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகவாவது சேர்ந்து வாழ்வார்கள் என தங்களின் கருத்தை தெரிவித்தனர். ஆனால் ஜெயம் ரவி தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக உள்ளார். தன்னுடைய அறிக்கையில் கூட ஜெயம் ரவி, குடும்பத்தின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு பின்னர் ஆர்த்தியின் பெயர் அதிகளவிலான விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், ஆர்த்தி தன்னுடைய தரப்பில் இருந்து, ஜெயம் ரவியின் அறிக்கையில் குறிப்பிட்ட விஷயத்தை மறுத்தார். தன் மீது கலங்கம் விளைவிக்கும் விதமாக சில பேச்சுகள் அடிபட்டதால் மட்டுமே இந்த விளக்கத்தை கொடுப்பதாகவும், ஜெயம் ரவி தன்னுடன் ஆலோசித்து விவாகரத்து முடிவை எடுக்கவில்லை. கணவர் ரவியை சந்திக்க முயற்சி செய்தபோது, தான் தடுக்கப்பட்டதாகவும் ஆர்த்தி ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆர்த்தி அறிக்கை வெளியான ஓரிரு தினங்களில், ஜெயம் ரவிக்கும் பிரபல பாடகி கெனிஷாவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவியது. இதற்கு ஜெயம் ரவி பிரதர் படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு வந்தபோது விளக்கம் கொடுத்தார். தன்னை பற்றி வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கெனிஷா தன்னுடைய தோழி மட்டுமே என்று கூறினார். அதை போல் பல பேட்டிகளில் கெனிஷா உடனான தகவல் முற்றிலும் வதந்தி என்பதை ஜெயம் ரவி மறுத்து பேசினார்.
ஆர்த்தி தரப்பில் இருந்து ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். சில பேட்டிகளில் ஆர்த்தியால் தான் அன்பவித்த விஷயங்களை கண்ணீர் விடாத குறையாக பேசி இருந்தார். ஆர்த்தியால் பல வருடங்களாக வாட்ஸ் ஆப் போன்ற செயலியை பயன்படுத்துவது இல்லை என்றும், தன்னுடைய இன்ஸ்ட்டா கிராம் கணக்கை கூட நிர்வகித்து வருவது ஆர்த்தி தான் என பேசிய ஜெயம் ரவி, இதுவரை தனக்கென சொந்த பேக் அக்கௌன்ட் கூட இல்லை என கூறியது தான் அதிர்ச்சியின் உச்சம்.
45
Jayam ravi Statement
தன்னை வீட்டு பணியாளர்கள் முன்பு ஆர்த்தி பல முறை அசிங்க படுத்தியதையும், வீட்டில் உள்ள பெயரியவர்களை கூட ஆர்த்தி மதிப்பதில்லை என கூறி இருந்தார். அதே போல் நான் ஏற்கனவே இரண்டு முறை லாயர் மூலம் ஆர்த்தியின் பெற்றோரிடம் விவாகரத்து பேசி விட்டு தான், நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ஆர்த்தி தனக்கு தெரியாது என்று கூறுவதில் உண்மை இல்லை என ஜெயம் ரவி தெரிவித்தார். தன்னுடைய மூத்த மகனிடம் அவருக்கு புரிவது போல் விவாகரத்து விஷயம் குறித்து பேசினேன். ஆனால் அவர் நாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் விருப்ப பட்டார். ஆனால் நான் அதற்க்கு வாய்ப்பில்லை என கூறிவிட்டேன். இளையமகன் அயான் மிகவும் சிறியவர் என்பதால் நான் இதை பற்றி அவரிடம் பேச வில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெயம் ரவி 'பிரதர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, "விவாகரத்து பற்றி மக்கள் பேசும் வதந்திகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, தான் ஒரு பொது நபராக இருப்பதால், என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை புறக்கணிக்க முடியாது. நான் எதை செய்தாலும் அவர்கள் அது பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்கள் சினிமாவை விரும்புகிறார்கள். நடிகர்களை பற்றி பேச விரும்புகிறார்கள். அதனால் அவர்களை நான் குறை சொல்ல முடியாது அதில் அர்த்தமும் இல்லை. உண்மை என்ன என்பதை மட்டுமே எடுத்து சொல்ல முடியும். மற்றபடி வரும் வதந்திகளை பார்த்து அமைதியாக தான் இருக்க வேண்டும்.
ஒருபோதும் என்னால் மக்களை தனித்தனியாக சந்தித்து... என்னுடைய விளக்கத்தை கொடுத்து கொண்டிருக்க முடியாது. அது சாத்தியம் அற்றது என தெரிவித்துளளார். இவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.