ஆதவன்; சுசீலா தான் பாடணும்னு அடம்பிடித்த சரோஜா தேவி - கடைசியில் நடந்த ட்விஸ்ட் என்ன தெரியுமா?

Veteran Actress Saroja Devi : சூர்யாவின் "ஆதவன்" திரைப்படத்தில், மூத்த தமிழ் திரையுலக நடிகை சரோஜாதேவிக்கு நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்த விஷயத்தை இந்த பதிவில் காணலாம்.

Saroja Devi

கடந்த 1938ம் ஆண்டு பெங்களூரில் பிறந்த நடிகை தான் சரோஜா தேவி. கன்னடத்து பைங்கிளி என்று தமிழ் மக்கள் அனைவரும் பாசத்தோடு அழைக்கும் ஒரு மாபெரும் நடிகை அவர். கிட்டத்தட்ட இந்திய சினிமாவில் ஏழு தலைமுறைகளாக அவர் பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சும்மர் 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1955ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான "மகாகவி காளிதாசா" என்கின்ற திரைப்படம் தான் இவர் நடித்த முதல் திரைப்படமாகும்.

'அமரன்' பட புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சிவகார்த்திகேயன்! வெளியானது அச்சத்தில் புரமோ!

MGR Movie

கடந்த 1955ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு வரை இவர் நடித்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு கூட பிரபல "கலர்ஸ் தமிழ்" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கோடீஸ்வரி" என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றிருக்கிறார். அது தான் இவர் இறுதியாக பங்கேற்ற நிகழ்ச்சி என்றே கூறலாம். தற்பொழுது தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வரும் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் பயணித்து வருகிறார் என்பது ஒரு மகத்தான சாதனையாகவே பார்க்கப்படுகிறது. பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான சரோஜாதேவி எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையான புகழோடு வளம் வந்தவர்.


Once more movie

இந்த சூழலில் தான் கடந்த 2009ம் ஆண்டு பிரபல இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் "ஆதவன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "ஒன்ஸ்மோர்" திரைப்படத்தில் தான் அவர் நடித்திருந்தார். 97க்கு பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து தான் அவர் மீண்டும் தமிழில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதவன் திரைப்படத்தில் "தேகோ தேகோ" என்கின்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்த பாடலில் நயன்தாரா மற்றும் சரோஜாதேவிக்கு இடையே ஒரு போட்டி நடப்பது போன்ற ஒரு பாடலாக அமையப் பெற்றிருக்கும். 

Aadhavan Movie

இந்நிலையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் அந்த பாட்டிற்கு சுசீலா தான் தனக்கு டப்பிங் பாட வேண்டும் என்று சரோஜாதேவி அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் திரைக்கதைக்கு அது ஒத்துப் போகாத நிலையில், கடைசியில் அந்த பாடலை வேறு ஒரு பாடினார், அந்த பாடகியின் பெயர் சந்தியா. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், பாடகி சந்தியா வேறு யாருமல்ல பிரபல பாடகி சுசீலாவின் மருமகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு ஒரு நாள் இந்த விஷயம் தெரிந்த சரோஜாதேவி, மிகவும் ஆச்சரியப்பட்டு படக்குழுவை வெகுவாக பாராட்டினாராம்.

பிரபாஸ் - சமந்தா ஜோடி இதுவரை ஏன் இணைந்து நடிக்கவில்லை?

Latest Videos

click me!