'அமரன்' பட புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சிவகார்த்திகேயன்! வெளியானது அச்சத்தில் புரமோ!

Published : Oct 25, 2024, 05:30 PM IST

தீபாவளி விருந்தாக வெளியாக உள்ள 'அமரன்' படத்தை புரோமோட் செய்வதற்காக, நடிகர் சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே கெஸ்ட்டாக சென்று போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

PREV
15
'அமரன்' பட புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சிவகார்த்திகேயன்! வெளியானது அச்சத்தில் புரமோ!
Amaran Movie Promotion Episode

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் 6-ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கிய நிலையில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து முதல் வாரம் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியேறிய நிலையில், இரண்டாவது போட்டியாளராக கடந்த வாரம் அர்னவ் வெளியேற்றப்பட்டார்.

25
Bigg Boss tamil season 8 Contestant

மேலும் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு பெண் போட்டியாளர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என தெரிகிறது. அவர் தர்ஷா அல்லது பவித்ராவாக இருக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரமாக டல் அடித்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி...  மூன்றாவது வாரத்தில் சூடு பிடித்துள்ளது. போட்டியாளர்கள் முட்டி மோதி விளையாடுவதை தாண்டி, புத்திசாலித்தனமாக விளையாடுவதை பார்க்க முடிகிறது.

சொந்த அண்ணனிடம் உதவி கேட்டு அசிங்கப்பட்ட கண்ணதாசன்! திட்டி எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!

35
Bigg boss Tamil season 8

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காகவும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள், நடிகர் சிவகார்த்திகேயன் வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். போட்டிகளார்களுடன் பேசும்போது, அமரன் திரைப்படம் உணர்ச்சிகளை பதிவு செய்யும் ஒரு படம் என்றும், பிக் பாஸும் - அமரன் திரைப்படமும் ஒன்றுதான். இரண்டிற்கும் யூனிட்டி என்பது ரொம்ப முக்கியம் என கூறியுள்ளார்.

45
Sivakarthikeyan Celebrate Amaran

மேலும் போட்டியாளர்களுடன் 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வர உள்ளதை கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு, போட்டியாளர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இன்றைய தினம் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதால், நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

'கயல் சீரியல் பிரபலங்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்; ஹீரோவையே மிஞ்சிய ஹீரோயின்!

55
Amaran Movie Promotion:

மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில், சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் புவன் அரோரா, ராகுல் போஸ், லாலு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், உளிட்டா பலர் நடித்துள்ளனர். இப்படத்தை உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்ய, ஆர் கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories