அப்போ தளபதி 70 இருக்கா? பிரபல இயக்குனர் செய்யப்போகும் மாஸ் சம்பவம் - வெளியான செய்தி நிஜமா?

Thalapathy 70 : தளபதி விஜய் தன்னுடைய 69வது திரைப்பட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது திரையுலகில் அவர் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருந்த தளபதி விஜய், விரைவில் தனது கலை உலக வாழ்க்கைக்கு குட் பை சொல்லி விட்டு முழு நேர அரசியல் தலைவராக செயல்பட உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டதோடு, கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலும் வெளியாகி அவருடைய அரசியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் தளபதி விஜய் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு அரசியலில் களமிறங்க இருக்கிறார்.

விக்ராந்த் - ரித்விகா நடித்த தீபாவளி போனஸ்; ரசிகர்கள் மனதை கவர்த்ததா? திரைப்பட விமர்சனம்!

TVK Vijay

2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் தளபதி விஜயின் 69 ஆவது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவின் அறிவிப்புகளில் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் வருகின்ற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் தளபதி விஜயின் முதல் மாநில மாநாடு வெகு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அரங்கம் அமைக்கும் பணிகள் ஏற்கனவே நடந்த வருகிறது. தளபதி விஜய் மக்கள் மத்தியில் நடந்து சென்று பேசும் வண்ணம் சுமார் 600 மீட்டருக்கு மேடையில் Ramp Walk அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Venkat prabhu

இந்த சூழலில் தளபதி விஜய் தனது 68வது திரைப்படமாக "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார். அந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல அவருடைய 69 ஆவது திரைப்படப் பணிகளில் அவர் இப்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனது அரசியல் பணியையும், சினிமா பணியும் அவர் ஒரே நேரத்தில் நடத்தி வரும் நிலையில் தளபதி விஜய் 69 ஆவது திரைப்படத்தை முடித்துவிட்டு 70வது திரைப்படம் ஒன்றிலும் களமிறங்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

Atlee Kumar

அதாவது தன்னை வைத்து ஆரம்ப கட்டத்தில் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள், தற்பொழுது நலிந்த நிலையில் இருப்பின், அவர்களுக்கு உதவும் வகையில் அந்த திரைப்படத்தில் அவர் செயல்பட உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் வெளியான அந்த தகவல் பொய்யான தகவல் என்றும், தற்போது விஜய் அவரது 70-வது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் அட்லீயோடு இணை உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே ஹிந்தியில் மெகா ஹிட் ஆன ஜவான் படத்தை இயக்கிய அட்லீ, புதிய ஹிந்தி திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதில் கேமியோ கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

சொந்த அண்ணனிடம் உதவி கேட்டு அசிங்கப்பட்ட கண்ணதாசன்! திட்டி எழுதிய பாடல் சூப்பர் ஹிட்டான கதை!

Latest Videos

click me!