Published : Oct 25, 2024, 04:42 PM ISTUpdated : Oct 25, 2024, 05:56 PM IST
தன்னுடைய அண்ணனிடம் உதவி கேட்டு சென்ற கண்ணதாசன், அவர் உதவி செய்ய மறுத்து அசிங்கப்படுத்தியதால்.. அவரை திட்டி எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
காலம் கடந்து மக்களால் போற்றப்படும் பிரபலங்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் கண்ணதாசன். இவர் எழுதிய பாடல்கள், ஆன்மீகப் புத்தகங்கள், நாவல்கள், கவிதை தொகுப்புகள், போன்றவை இன்றளவும் அதிகப்படியான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் சுமார், 5,000 மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ள கண்ணதாசனின், உண்மையான பெயர் முத்தையா. காரைக்குடி அருகே உள்ள சிறு கூடல் பட்டி என்கிற ஊரில் பிறந்தார்.
25
Kannadasan life
இவரை இளம் வயதில் இவரை, இவரது பெற்றோர் சிகப்பு ஆட்சி என்பவரிடம் ரூ.7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக் கொடுத்துவிட்டனர். எனவே தன்னை தத்து எடுத்துக்கொண்டவர் சூட்டிய நாராயணன் என்கிற பெயரில், அவர்களின் செல்ல பிள்ளையாக வளர்ந்த கண்ணதாசன்... தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்ற போது, தனக்கு வைத்துக்கொண்ட புனைப் பெயர்தான் இந்த கண்ணதாசன். பின்னர் அதுவே அவரது பெயராகவும் அடையாளமுமாக மாறிப்போனது.
திரைப்படப் பாடல்களில் மட்டும் இன்றி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தவர் கண்ணதாசன். சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத ஒரு பிரபலமாகவே இருஙக கண்ணதாசன், எம்.ஜி.ஆரோடு எந்த அளவுக்கு நட்பு பாராட்டினாரோ, பின்னர் அவரையே அரசியலுக்காக கடுமையாக எதிர்த்தார். கண்ணதாசன் தனக்கு எதிர்ப்பு தெரிவித்து - விமர்சித்த போதிலும், அவர் தன்னுடைய படங்களுக்கு எழுதிய பாடல்கள் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கான ஆணி வேர் என்பதை உணர்ந்த MGR, தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை நியமித்தார்.
45
Kannadasan hit songs
இவர் எழுதியது ஏராளமான பாடல்கள் என்றாலும், இவர் எழுதியுள்ள சில பாடல்களுக்கு பின்னால் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன. கவிஞர் கண்ணதாசனை பொறுத்தவரை, தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களை சில பாடல்களில் எதார்த்தமாக கூறுபவர்.அப்படி தன்னுடைய அண்ணனிடம் உதவிகேட்டு சென்று அசிங்கப்பட்ட போது, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில், கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி உள்ளார்.
இயக்குனர் பீம் சிங் இயக்கத்தில், 1965-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பழனி'. இந்த படத்தில், சிவாஜி கணேசன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், தேவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில்... கண்ணதாசன் வாசிகளில், டி.எம்.சௌந்தர் ராஜன் பாடிய பாடல் தான், அண்ணன் என்னடா... தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்கிற சூப்பர் ஹிட் பாடல். இந்த பாடலை கண்ணதாசன் தன்னுடைய அண்ணன், ஏ எல் சீனிவாசன்... இடம் ஏதோ அவசர உதவி கேட்டு செல்ல அவர் செய்ய முடியாது என அசிங்கப்படுத்தியதால், அந்த ஆதங்கத்தை கொட்டி தீர்வும் விதமாகவே, விமர்சித்தி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.