அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கும் பெண்! யார் இந்த டூப்ளிகேட் உலக அழகி?

First Published | Oct 25, 2024, 2:41 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராயை ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் அச்சு அசல் அவரைப்போலவே தோற்றம் கொண்ட பெண் ஒருவரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kanwal Cheema, Aishwarya Rai

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். 50 வயதாகும் இவர் குறையாத அழகோடும், கவர்ச்சியோடும் இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் மேக்கப்னு சிலர் கிண்டலுக்கு சொன்னாலும், உடல்நலத்தையும் அழகையும் ஐஸ்வர்யா ராய் பாதுகாத்து வருவது தான் அதன் உண்மையான காரணம். இப்பவும் பாலிவுட்டின் பியூட்டி குயின் என்று சொன்னால் பலருக்கும் ஞாபகத்துக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான்.

Aishwarya Rai Look a Like

உலக அழகி போட்டிகளில் இந்தியாவிலிருந்து பலர் பங்கேற்று வெற்றி பெற்று இருந்தாலும், உலக அழகி என்று சொல்லும்போது அனைவருக்கும் மனதில் தோன்றுவது ஐஸ்வர்யா ராய் பெயர்தான். அந்த அளவு பிரபலமான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப் பச்சனின் ஒரே மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்கிற மகள் உள்ளார்.

Tap to resize

Kanwal Cheema and Aishwarya Rai

ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருக்க விரும்புவார். இந்த நிலையில் அச்சு அசல் ஐஸ்வர்யா ராயைப் போலவே இருக்கும் பாகிஸ்தான் தொழிலதிபர் கன்வால் சீமாவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைராகி வருகிறது. ஐஸ்வர்யா ராய் போலவே கூர்மையான மூக்கும், அழகான கண்களோடும் இருப்பதால் கன்வால் சீமா அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே காட்சியளிக்கிறார்.

கன்வால் சீமாவின் புகைப்படத்தை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். சிலர், ஐஸ்வர்யா ராயை விட கன்வால் சீமா அழகாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதற்கு முன்னர், 'சுஹானி அஹுஜா' என்ற வெப் தொடரில் நடித்த அஞ்சலி சிவராமன், ஐஸ்வர்யா ராயைப் போலவே இருந்ததால் அவரை பிரபலமாக்கிய நெட்டிசன்கள் தற்போது கன்வால் சீமாவை பிரபலமாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராயின் பிரசவம் எப்படி நடந்தது? மாமனார் அமிதாப் கூறியது என்ன?

who is Kanwal Cheema

ஆனால் நெட்டிசன்கள் தன்னை ஐஸ்வர்யா ராயின் டூப்ளிகேட் என சொல்வது கன்வால் சீமாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதை அவரே பேட்டியில் ஓப்பனாக கூறி இருக்கிறார். கன்வால் சீமா பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். அவர் 'மை இம்பேக்ட் மீட்டர்' டிஜிட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வறுமையால் வாடும் மக்களைப் பற்றி பேசும் தளமாக இது உள்ளதோடு, கஷ்டப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளையும் சீமாவின் நிறுவனம் செய்து வருகிறது.

Pakistani Entrepreneur Kanwal Cheema

கன்வால் சீமா, பள்ளிப்படிப்பை மட்டும் தான் பாகிஸ்தானில் படித்தார். அதன்பின்னர் மேற்படிப்பை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பயின்ற அவர், சொந்த பிசினஸ் செய்ய வேண்டும் என்பதற்காக 200 பில்லியன் டாலர் மதிப்புடைய கம்பெனியில் கிடைத்த உயரிய வேலையை உதறித்தள்ளிவிட்டு வந்து தற்போது பாகிஸ்தானில் தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் ஏமாற்றினாரா?

Latest Videos

click me!